என்ன பார்த்தா வாழ்க்கையையே வெறுத்துருவ!. இறப்பதற்கு முன்பு மனோபாலாவிடம் பேசிய ஸ்ரீவித்யா!..

Published on: May 15, 2023
---Advertisement---

நகைச்சுவை கலைஞர், இயக்குனர் என இரு துறைகளிலுமே சிறப்பாக தனது பங்கை கொடுத்தவர் நடிகர் மனோபாலா. மனோபாலாவின் நகைச்சுவைகள் பலவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ளன. பழைய படங்களில் துவங்கி இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்தார் மனோபாலா.

சந்தானத்தோடு சேர்ந்து மனோபாலா நடித்த காமெடிகளும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக ஆம்பள, சிறுத்தை மாதிரியான திரைப்படங்களில் அவர்களது காம்போ சிறப்பாக இருப்பதை பார்க்க முடியும்.

தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார் மனோபாலா. ஆனால் அவருக்கு இயக்குனர் ஆவதை விடவும் நகைச்சுவை கலைஞராக நடிக்கவே வாய்ப்புகள் கிடைத்தன. சில நாட்களுக்கு முன்பு நடந்த மனோபாலாவின் மரணம் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனோபாலா நடிகை ஸ்ரீ வித்யாவிற்கு நல்ல நண்பராக இருந்தார். ஸ்ரீ வித்யா உடல் முடியாமல் இருந்த காலக்கட்டங்களில் எந்த நடிகரோடும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் அவர் மனோபாலாவிடம் மட்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது ஸ்ரீ வித்யா பேசும்போது நீ பார்த்த பழைய ஸ்ரீ வித்யாவாக நான் இல்லை. இப்ப என்ன பார்த்தா நீ வாழ்க்கையையே வெறுத்துருவ என கூறியுள்ளார். மேலும் எனக்கென யாருமே இல்லை என வருந்தியுள்ளார் ஸ்ரீ வித்யா. அப்போது அதற்கு பதிலளித்த மனோபாலா உங்களுக்குதான் தமிழக மக்களே துணையாக இருக்காங்களே என கூறியுள்ளார்.

அதே போல ஸ்ரீ வித்யாவின் மரணத்திற்கு பிறகு அவரது உடலை அரச மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. இதை மனோபாலா ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.