மணிரத்னம் படத்தைப் பார்த்து விட்டு செருப்பை எறிந்த நடிகை… இப்படி பண்ணிட்டீங்களேம்மா..!

Published on: August 16, 2024
Manirathnam
---Advertisement---

நல்ல வேடம் தனக்குக் கிடைக்கவில்லையே என்பது பெரிய விஷயமல்ல. கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாமல் போனால் தான் வடபோச்சேன்னு ஃபீலிங் வரும். அது நடிகைன்னா ஆத்திரம் அதிகமாகும். அப்படி ஒரு சம்பவத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துள்ளார். பார்க்கலாமா…

மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் அமரன். படத்தை இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது முதல் படமே ஹிட். ரங்கூன்;. இந்தப் படத்திற்காக இவர் ஏறி இறங்காத ஹீரோக்கள் இல்லை. இந்தப் படத்தில் கடைசியாக கௌதம் கார்த்திக் நடித்தார்.

பிரமாதமான படம். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் கமலை ஈர்த்தது.  அதை அவரே தயாரிக்க சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் அமரன்.

அமரன் கிளிம்ப்ஸ் வீடியோ நேற்று முன்தினம் ரிலீஸானது. அன்று தான் ரோஜா படம் உருவான 32வது ஆண்டு. அப்போது ரோஜா படம் வேற லெவலில் மணிரத்னம் தெறிக்க விட்டு இருந்தார். எழுத்தாளர் சுஜாதா படத்திற்குப் பெரிய பலம். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா காலில் கிடந்த செருப்பைக் கழற்றி வீசி எறிந்தாராம்.

என்ன காரணம்னா மணிரத்னம் முதலில் மதுபாலா கேரக்டருக்கு இவரைத் தான் அழைத்தாராம். ஆனால் அவரது பாட்டி ருக்மணி தான் நடிக்க வேணாம்னு தடை போட்டாராம். படத்தைப் பார்த்து விட்டு வந்ததும் ‘இதுல நடிச்சிருந்தா வேற ஒரு ரேஞ்ச் வந்துருக்கும். நீ தான் கெடுத்துட்டே’ன்னு கத்தினாராம்.

Roja
Roja

அப்படின்னா அந்தப் படம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திருக்குன்னு பார்த்துக்கோங்க. தேசியக்கொடியை எரிக்கும்போது அரவிந்தசாமி பாய்ந்து பிடிச்சி அணைக்கும்போது தியேட்டர்ல ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினாங்க.

ஆனா தமிழில் எதிர்பார்த்த அளவு வசூல் இல்லை. ஆனா இந்தில எடுக்கும்போது ஹாலிவுட்டில் மிரண்டு போனார்களாம். அந்த அளவு காஷ்மீரை அழகாகக் காட்டி இருந்தார்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.