More
Categories: Cinema History Cinema News latest news

தகடு தகடு!… செம ஃபேமஸ் ஆன சத்யராஜ் வசனம் உருவானது எப்படி தெரியுமா?..

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சத்யராஜ், கோயம்பத்துரில் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். ஆயினும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற வெறி இருந்தது. ஆனால் சத்யராஜ்ஜின் தாயாருக்கு அதில் விருப்பம் இல்லை. எனினும் தனது பெற்றோரின் விருப்பத்தையும் மீறி சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி அலைந்தார் சத்யராஜ்.

நடிகர் சிவக்குமார் சத்யராஜ்ஜுக்கு மிகவும் நெருக்கமான உறவுக்காரர். ஆதலால் சிவக்குமாரிடம் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வாங்கித் தருமாறு கேட்பதற்காக அவ்வப்போது அவரை சந்திக்க செல்வாராம். ஆனால் சத்யராஜ்ஜின் தாயாருக்கு சத்யராஜ் நடிகராவதில் எந்தளவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததோ அந்தளவுக்கு சிவக்குமாருக்கும் விருப்பம் இல்லாமல் இருந்ததாம். ஆதலால் “தேவையில்லாத வேலை பார்க்காத, ஊருக்கு கிளம்பு போய்டு” என சிவக்குமார் சொல்லிக்கொண்டே இருப்பாராம்.

Advertising
Advertising

Sathyaraj

எனினும் சத்யராஜ் பல தயாரிப்பாளர்களிடமும் இயக்குனர்களிடமும் வாய்ப்பு தேடி அலைந்தாராம். அவ்வாறுதான் கமல்ஹாசனின் “சட்டம் என் கையில்” திரைப்படத்தில் சத்யராஜ்ஜுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின் வில்லன் வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்தார் சத்யராஜ்.

இதனிடையே 1985 ஆம் ஆண்டு சத்யராஜ், கமல்ஹாசனின் “காக்கிச் சட்டை” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சத்யராஜ்ஜின் வில்லத்தனமான நடிப்பு இப்போதுவரை பேசப்படும் ஒன்றாக அமைந்தது. குறிப்பாக சத்யராஜ்ஜின் மிகப் பிரபலமான வசனமான “தகடு தகடு” என்ற வசனம் இடம்பெற்றது “காக்கிச் சட்டை” திரைப்படத்தில்தான்.

Sathyaraj

இந்த நிலையில் “தகடு தகடு” என்ற வார்த்தை எப்படி உருவானது என்பது குறித்தான சுவாரஸ்ய தகவல் ஒன்றை சத்யராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு கலந்துகொண்ட ஒரு விழாவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Sathyaraj

அதாவது அத்திரைப்படத்தில் பிணத்தில் தகடு ஒன்று வைத்து அதனை கடத்துவதுதான் கதை. அதில் ஒரு காட்சியில் பிணத்தை தோண்டும்போது தகடு இருக்காது. அப்போது அங்கே இருக்கும் ஒரு நபரிடம் சத்யராஜ் “தகடு எங்கே?” என கேட்பாராம். இந்த காட்சி படமாக்கும்போது மழை பெய்துகொண்டிருந்ததாம் . ஆதலால் இடி சத்தத்தில் எதிரே நின்றவருக்கு சத்யராஜ் கூறியது சரியாக கேட்கவில்லையாம்.

இதையும் படிங்க: த்ரிஷாவை காரணம் காட்டி சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய நயன்தாரா… என்னவா இருக்கும்??

Kaakki Sattai

ஆதலால் சத்யராஜ் “தகடு தகடு” என அவருக்கு கேட்கும்படி தற்செயலாக கூறியுள்ளார். சத்யராஜ் மிகவும் வித்தியாசமான மாடுலேஷனுடன் அவ்வாறு கூறியதை பார்த்த கமல்ஹாசன் அப்போதே கைத்தட்டி அதனை பாராட்டினாராம்.  “இது நன்றாக இருக்கிறது, இதை படத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்” என கமல்ஹாசன் இயக்குனரிடம் கூறினாராம். அவ்வாறுதான் அத்திரைப்படத்தில் “தகடு தகடு” என்ற வசனம் இடம்பெற்றதாம்.

Published by
Arun Prasad

Recent Posts