குட் பேட் அக்லிய ஃப்ரியாவே வச்சுக்குங்க!. ஜனநாயகன் படத்துக்கு ரூட்டு போடும் பிரபலம்!..

by Rohini |
jana 1
X

jana 1

குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்க படத்தின் அப்டேட் பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு பக்கம் அஜித் அவருடைய கார் ரேஸில் மும்முரமாக இருந்து வருகிறார். நேற்று இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து வெற்றிப்பெற்றது. இப்படி தொடர்ந்து ரேஸில் வெற்றி பெற்று வரும் அஜித் அடுத்து ரிலீஸ் ஆகும் குட் பேட் அக்லி படத்திலும் வெற்றியை அடைவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் வியாபாரம் ஒரு பக்கம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதனுடைய தமிழ் நாடு தியேட்டரிக்கல் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் தான் வாங்கியிருக்கிறது. இங்கு மட்டும் இல்லை. கேரளா மற்றும் கர்நாடகாவுக்கும் இந்த நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது. கேரளாவில் கோகுலம் மூவிஸிடம் கொடுத்துதான் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

அதை போல் கர்நாடகாவில் கேவிஎன் நிறுவனத்திடம் கொடுத்துதான் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.ஆனால் கர்நாடகாவில் வேறொரு பெரிய நிறுவனம் பெரிய தொகைக்கு சிங்கிள் பேமெண்டில் குட் பேட் அக்லியை வாங்கிக் கொள்வதாக கூறினார்களாம். ஆனால் ரோமியோ பிக்சர்ஸ் அதை வேண்டாம் என சொல்லிவிட்டார்களாம். அதோடு கேவிஎன் நிறுவனத்திற்கு குட் பேட் அக்லி படத்தை ஃப்ரீயாகவே கொடுத்துதான் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.

இதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் இருக்குமே என்று பார்க்கும் போது கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவெனில் கேவிஎன் நிறுவனம்தான் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமையை கைப்பற்றும் முயற்சியில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இருக்கிறது. அதனால்தான் குட் பேட் அக்லி படத்தை ஃப்ரீயாகவே கேவிஎன் நிறுவனத்திற்கு ரிலீஸ் செய்ய கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே இதற்கு முன் விஜய் நடித்த கோட் படத்தின் தமிழ் நாட்டு தியேட்டரிக்கல் உரிமையையும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியது. இப்போது ஜனநாயகன் படத்தையும் கைப்பற்றும் முயற்சியில் இப்போதே இருந்தே ஈடுபட்டு வருகிறது.

Next Story