Connect with us

Cinema News

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது பாய்ந்த வழக்கு… பின்னணியில் ‘அந்த’ சிறப்பான சம்பவம்…

இயக்குனர் ஆர்.வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படத்தில் புகைபிடிப்பது போல காட்சிகள் வரும்போது, திரையில் இடம்பெற வேண்டிய  புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற  எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. எனவே, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனதின் நிர்வாகிகளான  தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அஅளிக்கப்பட்டிருந்தது.

Aishwarya dhanush

இந்த புகாரை ஏற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம் நாளை ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் ஆகிய இருவரும் ஆஜராக உத்தரவிடபட்டிருந்தது.

இதையும் படியுங்களேன்- அனிருத்துக்கு அல்வா கொடுத்த ஆண்டவர்… விக்ரம் மெகா ஹிட்டை மறந்துடீங்களா கமல் சார்.?!

இதனையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், பொது சுகாதார துறை துணை இயக்குனர் மனுவுக்கு பதிலளிக்கும் படி உத்தரவிட்டு  விசாரணையை ஆகஸ்ட் 10ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top