மக்கள் நாயகன் ராமராஜனிடம் பலரும் கதை சொல்ல வந்தார்களாம். ஆனால் எதுவுமே செட்டாகவில்லையாம். அந்த நேரம் பிரபல இயக்குனரும், வசனகர்த்தாவுமான ராதாபாரதி சொன்ன ஒரு கதை ஓகே ஆகி விட்டதாம். அது என்னன்னு பார்க்கலாமா…
தங்கத்தின் தங்கம் என்ற படம். அதுக்கு என்னைக் கூட்டிட்டுப் போறாங்க. நிறைய பேரு கதை சொல்லியும் ராமராஜனுக்குத் திருப்தி இல்லை. என்னைப் பார்த்ததும் ராமராஜன் வாடா ராதான்னு கூப்பிட்டார். ராமராஜன்கிட்ட ‘இவரு பிரமாதமான கதை வச்சிருக்காரு’ன்னு என்னை மாட்டிவிட்டுட்டாரு.
‘சார் வந்து சிலம்பத்துல கெட்டிக்காரர். வெளியூர்க்காரன் ஜெயிச்சிட்டான். உங்க ஊருக்காரன் தோத்துப் போயிட்டான். வேற எவன்டா இருக்கான் ஆம்பளன்னு கேட்குறான். போடுங்கடா மாலையைன்னு சொல்றான். மாலையை எடுத்துக்கிட்டு வர்றாங்க. அப்போது ஒரு காலை மட்டும் காட்டுறாங்க’. எம்ஜிஆரு மனசுக்குள்ள வந்தாரு.
இவரை நிமிர்ந்து உட்கார வைக்கணும். அதுக்கு எம்ஜிஆர் மேட்டர் தான் கரெக்ட்னு நினைச்சேன். மனசுக்குள்ள எம்ஜிஆர் இறங்கிட்டாரு. ‘கால் மட்டும் நடந்து வர்றத காட்டுறோம். அதை அப்படியே பில்டப் பண்ணினா உரிமைக்குரல் எம்ஜிஆர் மாதிரி… சிலம்பு கம்போட நீங்க இருக்குறீங்க…
அதோட உங்க முகத்தைக் காட்டுறோம். மக்கள் நாயகன் ராமராஜன்னு டைட்டில் போடுறோம். அந்தக் கம்பை எறியுறீங்க. அது மாலையைத் தூக்கிட்டுப்போகுது. கம்பு ஒரு பக்கம். மாலை ஒரு பக்கம்…. பறக்குது. அப்புறம் பார்த்தா அந்த மாலை உங்க மேலே விழுந்தது. அந்தக் கம்பு உங்க கைக்கு வருது. ‘யாரைப் பார்த்துடா கேட்ட? இந்த ஊருல ஆம்பளை இல்லியா? வாடா’…ன்னு கூப்பிடறீங்க. ‘எங்க முத்து தங்க முத்து’ன்னு ஒரு சாங் டன்டனக்கன டன்டனக்கனன்னு மியூசிக்’. அப்படியே விட்டுரு…
இதையும் படிங்க… பஞ்சதந்திரம் படத்தில் இந்த விஷயம் எல்லா இடத்திலையும் இருக்கே… அடங்கப்பா!…
‘இப்படியே பாலோ பண்ணு’ன்னு பிரபாகரன் சொன்னாரு. அந்த மாதிரி அந்தக் கதையை ராமராஜன்கிட்ட ஓகே பண்ணினோம். இந்த தகவலை பிரபல இயக்குனர் ராதாபாரதி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார். தங்கத்தின் தங்கம் திரைப்படம் 1990 வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…