பெருந்தன்மை எல்லாம் ஒரு அளவுக்குதான் சார்! – தனுஷிற்கு எதிராக வெற்றிமாறன் செய்த வேலை!
வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஆக்ஷன் ப்ளாக் திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் காதல் திரைப்படங்களிலும் கூட நடிக்க கூடியவர் நடிகர் தனுஷ். தற்சமயம் தனுஷ் நடித்து வெளியான வாத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷும் தமிழ் சினிமாவில் வெகு காலமாக ஒன்றாக பயணித்து வருகின்றனர். இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விசாரணை படம் தவிர்த்து மீதி அனைத்து படங்களிலுமே தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த அளவிற்கு இருவருக்குமிடையே நட்பு இருந்து வருகிறது.
ஆனால் வட சென்னை திரைப்படம் இயக்கிய காலக்கட்டத்தில் வெற்றி மாறனுக்கும் தனுஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. வெற்றி மாறன் வட சென்னை திரைப்படத்தின் கதையை எழுதிய சமயத்தில் அதில் சிம்புவைதான் நடிக்க வைப்பதாக இருந்தார்.
தனுஷுன் கதாபாத்திரமான அன்பு கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க இருந்தார். வெற்றிமாறன் இந்த விஷயத்தை தனுஷிடம் கூறினார். “உங்களுக்கு சிம்பு கரெக்டா இருப்பார்னு தோணுனா பண்ணுங்க சார்” என தனுஷ் கூறிவிட்டார். அப்போது படத்தில் வரும் ராஜன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என விரும்பினார் வெற்றிமாறன்.
இதுக்குறித்து தனுஷிடம் பேசியப்பொழுது “பெருந்தன்மை எல்லாம் ஒரு அளவுக்குதான் சார், நானும் மனுசந்தான் என் போட்டி நடிகர் படத்தில் நான் எப்படி துணை கதாபாத்திரத்தில் நடிக்க முடியும்” என தனுஷ் கேட்டுள்ளார். ஆனால் இறுதியில் வட சென்னை படத்தில் தனுஷ்தான் அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராஜன் கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடித்திருந்தார்.