இசையுலகில் நடக்கும் குழப்பங்கள்... இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் கண்டுகொள்வார்களா?
இன்று திரை இசைக் கலைஞர்கள் சங்கம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளது. ஏற்கனவே திரை இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவராக இருந்தவர் தினா. அவர் நான் தான் மீண்டும் தலைவராக இருப்பேன் என்று அடம்பிடிக்க இளையராஜா, கங்கை அமரன் அதற்கு மறுத்தனர். கடைசியில் பல போராட்டத்திற்குப் பிறகு தேர்தல் நடந்தது. இதில் தேவாவின் தம்பி சபேஷ் முரளி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இதையும் படிங்க... கல்யாணத்தில் கலக்கல் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!.. ‘அண்ணியார்’ என குவியும் கமெண்ட்ஸ்!..
அதன்பிறகு இசைக்கலைஞர்களுக்குக் கொஞ்சம் சங்கத்தின் மேல் நம்பிக்கை வந்தது. ஆனால் இப்போது மீண்டும் குளறுபடி நடந்து வருகிறது. இசைக்கலைஞர்கள் வாசிக்கிறதுக்குப் பணம் வராது. முதுமைக்காலத்தில் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுகிறது.
சம்பளம் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களது வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விடுகிறது. இன்னொரு விஷயம் பணிபுரியும்போது அவர்கள் இறந்துவிட்டால் அந்தக் குடும்பம் ரொம்பவே பாதிக்கப்படும். இன்னொரு விஷயம் கலைஞர்கள் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். எந்த சேமிப்பும் இல்லாமல் இருக்கின்றனர்.
இப்படி கலைஞர்கள் ரொம்ப சிரமப்படுவதைப் பார்த்து இடதுசாரி சிந்தனையாளர் எம்.பி.சீனிவாசன் இசைக் கலைஞர்களுக்காக ஒரு சங்கத்தை ஆரம்பிக்கிறாங்க. இது வளர்ந்து வரும்போது பல இசைக்கலைஞர்களின் பசியையும், பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளது.
தினாவின் ஆதரவாளரான பாலேஜ் பசேந்திரி சபேஷ் முரளிக்கு எதிராக தேர்தலில் நின்று தோற்றவர். இவர் தற்போது சபேஷ் முரளிக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படுகிறார்;. இவர் சங்கத்திற்கு எதிராக சிறுபிள்ளைத்தனமாக பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது சங்க நிர்வாகத்திற்கு எதிரானது. இதனால் சங்கத்தின் சார்பாக இசைக்கலைஞர்களுக்கு எந்த வேலையும் நடக்கவில்லை.
தினாவுடன் இணைந்து எஸ்.ஏ.ராஜ்குமாரும் இருக்கிறார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. அவர் ரொம்ப நல்லவர் ஆச்சே. ஏன் சங்கத்தைப் பிளவு படுத்தும் வேலைகளில் ஈடுபடுவரிடம் போய் சேர்ந்துள்ளார் என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க... விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் டீசர் பார்த்தீங்களா?.. அனல் அரசு சும்மா மிரட்டியிருக்காரே!..
இந்த நிலையில் பெரிய பெரிய இசை ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் கூட மௌனமாக இருக்கிறார்களே... அது ஏன் என்று தான் புரியவில்லை. மீண்டும் சங்கம் சிறப்பாக செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.