இது வேற மாதிரியான காம்போ!.. அஜித்தை சந்தித்த சிவகார்த்திகேயன்!.. வைரலாகும் புகைப்படம்!..
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். டப்பிங் வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கையில் படம் வருகிற பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருக்கின்றது.
அடுத்ததாக் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் இணைய இருக்கிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் போதே பணிபுரியும் டெக்னீஷியன்ஸ், ரசிகர்கர்கள் என அவர்களுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அஜித்துடன் இருக்கும் புகைப்படம் இன்று வைரலாகி கொண்டிருக்கின்றது. அந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயனே தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு ‘ நீண்ட நாள்களுக்கு பிறகு சந்தித்துக் கொண்டோம். சில பாஸிட்டிவிட்டி வார்த்தைகளால் அஜித் சாரின் வாழ்த்து கிடைத்ததற்கு நன்றி ’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கெனவே சிவகார்த்திகேயனுக்கு அஜித் அறிவுரை வழங்கியிருக்கிறார். என்ன அறிவுரை , ஏன்? எதற்காக என ஒரு செய்தியே வைரலாகி சுற்றிக் கொண்டிருந்தது. அது உண்மையா இல்லையா என்று ரசிகர்களும் குழம்பி போக இருக்க இப்பொழுது இந்த சந்திப்பு அஜித் சொன்ன வார்த்தை எல்லாம் உண்மை என்று சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவின் மூலமே தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இரு பெரும் மாஸ் நடிகர்களின் லுக்ஸ் வேற லெவல் என்று பாராட்டி வருகின்றனர்.