வைரமுத்துவுக்கும் சினேகனுக்கும் இடையே இப்படி ஒரு மோதல் இருக்கா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Published on: February 14, 2023
Vairamuthu
---Advertisement---

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக திகழ்ந்த வைரமுத்து, தனது 40 வருட சினிமா பயணத்தில் கிட்டத்தட்ட 7000க்கும் அதிகமான பாடல்களையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். வைரமுத்து எழுதிய “கள்ளிக்காட்டு இதிகாசம்”, “கருவாச்சிக் காவியம்” ஆகிய நாவல்கள் மிகப் பிரபலமானவை.

Vairamuthu
Vairamuthu

எனினும் “மீ டூ” சர்ச்சைக்குப் பிறகு வைரமுத்துவுடன் பணியாற்றிய பல இயக்குனர்கள் பின் வாங்கினார்கள். இந்த நிலையில் பாடலாசிரியர் சினேகன், தனக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இருக்கும் விரிசல் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Also Read

அதாவது சினேகன் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையில் தன்னை இணைத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து சினேகன் தன்னுடைய மிகச் சிறந்த ரசிகர் என்றாலும் தன்னை சந்திக்கும்போது தன்னிடம் அவர் ஆட்டோகிராஃப் கூட வாங்கவில்லை என்பதை உணர்ந்துகொண்ட வைரமுத்து, சினேகனை குறித்து தனது பேரவையின் உறுப்பினர்களிடம் விசாரித்தார்.

Snehan
Snehan

“உங்களுடைய கவிதைகளில் எதுவும் சந்தேகம் இருந்தால் அதனை அவன்தான் தீர்த்து வைப்பான்” என அவர்கள் சினேகனை குறித்துக் கூறினார்கள். அவர்கள் சினேகனை குறித்து கூறியது அவருக்கு பிடித்துப்போக, சினேகனை தன்னிடம் பணியாற்ற வருமாறு அழைத்தார்.

எனினும் முதலில் சினேகன் மறுத்துவிட்டார். ஆனால் அதன் பிறகு பல கடிதங்கள் தொடர்ந்து அவருக்கு வந்த வண்ணம் இருந்தது. அதன் பின் ஒரு கட்டத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றலாம் என்று சினேகன் முடிவெடுத்தார்.

 Vairamuthu
Vairamuthu

அதன் பின் கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள் வைரமுத்துவோடு பயணித்திருக்கிறார் சினேகன். அப்போது ஒரு முறை சினேகனின் மீது ஒரு வீண் பழி விழுந்திருக்கிறது. ஆனால் அது சினேகனின் தவறு இல்லை என்பது தெரியவந்தபின் வைரமுத்து சினேகனிடம் மன்னிப்பு கேட்டாராம்.

ஆனாலும் சினேகனுக்கு அங்கிருக்க விருப்பமில்லையாம். அதன் பின் வைரமுத்துவிடம் இருந்து பிரிந்து சென்றிருக்கிறார். அதனை தொடர்ந்து ஒரு காலகட்டத்தில் சினேகன் பணியாற்றும் எந்த திரைப்படத்திலும் வைரமுத்து பணியாற்ற மறுத்துவிட்டாராம்.

Snehan
Snehan

பாரதிராஜாவிற்கு வைரமுத்து மிகவும் ஆஸ்தான கவிஞர். வைரமுத்துவை அறிமுகப்படுத்தியதே பாரதிராஜாதான். அப்படி இருக்க பாரதிராஜா இயக்கிய “ஈர நிலம்” என்ற திரைப்படத்தில் சினேகன் ஒரு பாடலை எழுதுகிறார் என்று தெரிய வந்தவுடன் வைரமுத்து அத்திரைப்படத்திற்கு பாடல்கள் எழுத மறுத்துவிட்டாராம். இன்று வரை சினேகன் பாடல் எழுதும் எந்த திரைப்படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கே.பி.சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கியது அவருக்கே தெரியாதாம்… இது என்ன புது மேட்டரா இருக்கு!!