Connect with us
nagesh with sivaaj

Cinema History

அவன் வரமாட்டான்.. வரமாட்டான்!.. திருவிளையாடல் காமெடி உருவானது இப்படித்தானாம்!..

அன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கியவர் சிவாஜி கணேசன். நல்ல குரல் வளம் கொண்டு தெளிவான வசன உச்சரிப்பின் மூலம் துடிப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு சகப் போட்டியாளராக காணப்பட்டவர். அவர் இதுவரை ஏற்று நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. அந்த அளவிற்கு ஹீரோ முதல் குணச்சித்திரம் வரை எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தன் தெளிவான நடிப்பின் மூலம் திறமை வெளிப்படுத்தும் கலைஞன்.

sivaji ganesan

sivaji ganesan

வெறும் வசனம் மட்டும் பேசி நடிப்பது போல் இல்லாமல் தனது முக பாவனை மூலம் காட்சிக்கு தேவையானதை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவர். இதேபோல் காமெடியில் வசனங்களை மட்டும் பேசி நடிக்காமல் தனது உடல் அசைவுகளையும் முக பாவங்களையும் வைத்து காமெடி செய்வதில் வல்லவர் ”நாகேஷ்”. அன்றைய காலகட்டத்தில் நடிகர் நாகேஷ் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார். இருவரது காம்பினேஷனும் பல படங்கள் வந்தன. அதில் இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் திரைப்படம் 1965 ஆம் ஆண்டு ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் வெளியான ”திருவிளையாடல்” என்னும் திரைப்படம்.

tiruvilaiyadal

tiruvilaiyadal

இதில் சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் மற்றும் பலர் திரைப்படத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படம் படமாக்க படும்பொழுது படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு உண்மை நிகழ்வை அப்படியே அத் திரைப்படத்தில் காட்சியாக அமைத்து இருப்பார்கள். தர்மி என்னும் காதாபாத்திரத்தில் நாகேஷ் அற்புதமாக நடித்திருப்பார். அதில் நாகேஷ் சிவாஜி சந்திக்கும் முன்பு கோவிலில் அங்கும் இங்கும் நடந்து கொண்டு ”அவன் வரமாட்டான்.. வரமாட்டான்..” என புலம்பி நடந்து கொண்டிருக்கும் ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

அக்காட்சியை கண்டு ரசிகர்கள் இன்றளவும் சிரிக்க தவறியதில்லை. அக்காட்சி அமைக்க காரணமாக இருந்தவர் நடிகர் திலகம் ”சிவாஜி கணேசன்”. படபிடிப்பு தளத்திற்க்கு அவர் அன்று மேக்கப் போட்டுக் கொண்டு தாமதமாக வந்த காரணத்தினால் அக்காட்சி எடுக்கப்பட்டது. சிவாஜி மட்டும் குறித்த நேரத்தில் நாகேஷ் வந்த நேரத்திற்கு வந்திருந்தால் அக்காட்சி இப்படத்தில் இடம்பெற்றிருக்காது. அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட கால தாமத்தின் காரணமாக தான் நாகேஷ் இயக்குனர் ஏ.பி நாகராஜ் இடம் கேட்க அவரும் ஒப்புக்கொண்டு அந்த சம்பவத்தை இருவரும்  படமாக்கிக் கொண்டனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top