Connect with us
Dravidan

Cinema History

சத்யராஜ் போட்ட கண்டிஷன்… அதிகாலையில் துப்பாக்கியுடன் நின்ற தயாரிப்பாளர்…

பெப்சி தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் பண்ணும்போது எந்தப் படத்திற்கும் அவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. வேறு படங்களில் யாரையும் நடிக்கவும் விடவில்லை. அந்தக் கலவரத்தில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை தயாரிப்பாளர் சுந்தரி பிலிம்ஸ் முருகன் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திராவிடன் படத்தை பம்பாய்ல சூட்டிங் பண்ணிக்கிட்டு இருக்கோம். அப்போது ‘என் ரத்தத்தின் ரத்தமே’ படமும் தயாராகி வந்தது. தயாரிப்பாளர் பாலாஜிக்கும், பாக்கியராஜிக்கும் தகராறு நடந்தது. திராவிடன் படத்துக்கு சுரேஷ் பாலாஜி தயாரிப்பாளர். சத்யராஜ் நடித்த படம். பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.

இதையும் படிங்க… கோடியே கொடுத்தாலும் என் கொள்கையில் இருந்து மாற மாட்டேன்! அப்படி நடித்த நடிகர்கள் இதோ

பம்பாய்ல சூட்டிங் நடக்கும்போது பெப்சில இருந்து அத்தனை பேரும் காலையிலயே வந்து உட்கார்ந்துட்டாங்க. ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சந்திரன், பாபு சார் கேமரா மேன், டைரக்டர் எல்லாரும் உட்கார்ந்துருக்கோம். எல்லா ரூம்லயும் வந்து உட்கார்ந்துட்டாங்க. யாரும் சூட்டிங் போகக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அதில சத்யராஜ், ஜெய்சங்கர் ரெண்டு பேரும் தான் ஸ்ட்ராங்கா பேசுனாங்க.

சத்யராஜ் சார் தெளிவா பேசிட்டாரு. நீங்க கூப்பிட்டீங்க. டிக்கெட் போட்டிங்கன்னா இப்பவே கிளம்பி வந்துடறோம். ஆனா எனக்கு லட்டர் கொடுக்கணும்னு ஒரே ஒரு கண்டிஷன் போட்டாரு.

‘நாளைக்கு பாலாஜி என் மேல கேஸ் போட்டு சத்யராஜ் நடிக்காம வந்துட்டாரு. அதனால என் படம் நஷ்டமாச்சுன்னு அவரு சொன்னா அந்தத் தொகையை நீங்க கட்டுவதாக ஒத்துக்கணும்’னு சொல்லிட்டாரு. அதுக்கு ரெடின்னு சொல்லுங்க. நான் வந்துடறேன்னாரு. ஆனா அதுக்கு அவங்க யாரும் ரெடியா இல்ல. அப்புறம் மத்தியானம் வரை கலாட்டா பண்ணினாங்க. அப்புறம் சூட் முடிஞ்சி சென்னைக்கு வந்தோம். வந்தால் டைரக்டர் வீட்டுல கல்லைத் தூக்கி எறியறது, பாபு சார் வீட்ல கல்லை விடறதுன்னு ஒரே கலாட்டா.

இதையும் படிங்க… இப்படி திறந்துவிட்டா காத்தோட்டமா இருக்கு!.. பாதி மட்டும் மூடி மூடேத்தும் தமன்னா!…

குன்றத்தூர்ல சூட்டிங். அதுல 32 நடிகர்கள். அப்போ 100 பேர் வந்து கல்லைத் தூக்கி எறிஞ்சி ஒரே கலாட்டா. அப்புறம் பாலாஜி சார் போலீஸ்கிட்ட சொல்லி எல்லாரையும் குண்டுகட்டாத் தூக்கிட்டுப் போனாங்க. அப்போது பாலாஜி சார் அவுட்டோர்ல சூட்டிங். அங்கிருந்து காலையில கிளம்பும்போது பாந்தியன் ஆபீஸ் வந்து கலாட்டா பண்ண வருவாங்க.

இவரு துப்பாக்கியைத் தூக்கிட்டு ரெடியா நிப்பாரு. ‘உள்ளே வாங்கடா சுட்டுறேன்’னு சொல்வாரு. ஆனா போல்டான ஆளு. அவரை மாதிரி இன்னைக்கு ஒரு தயாரிப்பாளரும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top