வீரப்பனுக்கும் ரஜினிக்கும் இடையே நடந்த மோதல்! – இப்படியெல்லாம் நடந்துச்சா?
கோலிவுட்டில் புகழ்மிக்க நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் எப்போதும் குறைவான அளவிலேயே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். அப்படி கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட மிகவும் கவனமாக பேசுவார். ஏனெனில் தான் பேசும் விஷயம் எவர் ஒருவரையும் புண்படுத்தி விடக்கூடாது என்பதில் ரஜினிகாந்த் கவனமாக இருப்பார்.
ஆனால் அவரே ஒருவரை கடுமையாக தாக்கி பேசிய நிகழ்வு தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. கன்னடத்தில் நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த அப்பு என்கிற திரைப்படம் 100 நாட்கள் ஓடியதை கொண்டாடும் வகையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்துக்கொண்டார்.
அந்த விழாவில் அவர் பேசும்போது சந்தன கடத்தல் வீரப்பனை மிகவும் கடுமையாக தாக்கி பேசினார். வீரப்பன் போன்ற ஒரு ராட்ஷசனை நான் பார்த்ததே இல்லை. அவனை சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். அதற்கு முன்பு ரஜினிகாந்த் இப்படி எந்த மேடையிலும் பேசியது இல்லை.
ராஜ்குமாருக்கு நடந்த சம்பவம்:
இதற்கு பின்னால் ஒரு கதை உண்டு. நடிகர் புனித் ராஜ்குமாரின் தந்தையான நடிகர் ராஜ்குமாரை ரஜினிகாந்திற்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்த், ராஜ்குமாரின் மிகப்பெரும் ரசிகர் ஆவார். ஆனால் வீரப்பன் ஒரு சமயம் நடிகர் ராஜ்குமாரை கடத்தி பல மாதங்கள் காட்டில் வைத்திருந்தார். அந்த சமயங்களில் ராஜ்குமாரை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்து வந்தார் ரஜினி.
மேலும் அந்த சமயத்தில் அவர் வீரப்பன் மீது கடும் கோபத்தில் இருந்தார். அதன் எதிர்ப்பாகவே அந்த மேடையில் ரஜினிகாந்த் வீரப்பனை கடுமையாக தாக்கி பேசினார். அதற்கு பிறகு வீரப்பன் இறந்தபோது கூட அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருந்தார் ரஜினி. அந்த அளவிற்கு வீரப்பன் மீது கோபத்தில் இருந்துள்ளார் ரஜினிகாந்த்.