Cinema News
இவ்வளவு நாளா மறைஞ்சிருந்த கருப்பு ஆடு.. ‘விடாமுயற்சி’ டிலே ஆனதுக்கு காரணமே அவர்தானாம்!..
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் திரைப்படம் விடா முயற்சி. கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்னும் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றுப்பெறாமல் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதே வேளையில் படம் தொடங்கியதிலிருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை விடாமுயற்சி திரைப்படம் சந்தித்திருக்கிறது.
முதன் முதலில் இதற்கு பூஜை போட்டதே விக்னேஷ் சிவன்தான். விக்னேஷ் சிவன் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதுமே ரசிகர்கள் ஏகப்பட்ட மகிழ்ச்சி அடைந்ததை இன்னும் நம்மால் மறக்க இயலாது. அதேபோல் விக்னேஷ் சிவனும் தன்னுடைய இணையதள பக்கத்தில் இது குறித்து பதிவுகளை வெளியிட்டு அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்து இருந்ததையும் மறக்க முடியாது.
இதையும் படிங்க: சின்ன பூவை வச்சி மறச்சிட்டியே! நியாயமா?!.. ரசிகர்களை தவிக்கவிட்ட தமன்னா…
ஆனால் அவர் கதையில் ஏற்பட்ட குளறுபடிகள். தயாரிப்பு தரப்பில் கதை பிடிக்காமல் போனது. அதன் பிறகு விக்னேஷ் சிவனை இந்த படத்தில் இருந்து விலக்கியது என தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வந்தது. அதன் பிறகு மகிழ்திருமேனி இந்தப் படத்திற்குள் நுழைந்தார். ஆனாலும் படம் ஆரம்பிக்கப்பட்டதா என்றால் இல்லை. மகிழ் திருமேனி வந்த பிறகும் கதை விவாதம் என இரண்டு மாத காலத்தை எடுத்துக் கொண்டார்.
இப்படி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்க தாமதமாகிக் கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் படப்பிடிப்பும் ஆரம்பமானது. எப்படியும் நான்கு மாதத்திற்குள் ஒரே மூச்சாக படத்தை முடித்தாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒட்டு மொத்த படக்குழுவும் களமிறங்கியது.
இதையும் படிங்க: விஜய் ரேஞ்சுக்கு அஜித் இல்ல!. வெறும் பில்டப்!.. சும்மா நிறுத்துங்கடா!.. பொங்கியெழுந்த காமெடி நடிகர்….
அதன் பிறகு கடும் பனிப்பொழிவு என படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தது. இதற்கிடையில் இன்னும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு 70 நாட்கள் தேவைப்படுகிறதாம். அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஓரளவு முடிந்து விட்டதாக கூறிய நிலையில் இன்னும் 70 நாட்கள் ஏன் என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால் இப்போதுதான் தெரிகிறது. மகிழ் திருமேனி ஒரு காட்சியை நான்கு முறை எடுத்து பார்த்த பிறகே அதை ஓகே சொல்கிறாராம். அதனால் அஜித்திடம் இன்னும் சில நாட்கள் கால்ஷீட் கேட்டதாக தெரிகிறது. இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் வெற்றிமாறனின் மறு வடிவமாக இருக்கிறாரே மகிழ்ந்திருமேனி என கிண்டல் அடித்து வருகிறார்கள். இப்படி ஒரு காட்சியை நான்கு முறை எடுத்தால் 70 நாட்கள் என்ன? இன்னும் 100 நாட்களுக்கு படப்பிடிப்பு போகும் என்றும் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?