ரஜினிக்கும் விஜயகாந்துக்கும் உள்ள வித்தியாசம்!.. மனோபாலா கூறிய பதிலால் அதிர்ச்சி அடைந்த கேப்டன்...

by Rohini |
viji
X

vijayakanth rajini

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு எப்படி ஒரு பேரும் புகழும் இருக்கிறதோ அதே அளவிற்கு விஜயகாந்திற்கும் அதிக செல்வாக்கும் இருக்கிறது. கமல், ரஜினி இவர்கள் ஒரு நல்ல பீக்கில் இருக்கும்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் விஜயகாந்த். முதலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜயகாந்தை "நீயும் ஒரு ஹீரோ அந்தஸ்தை பெற வேண்டும்" என்று கூறி பல படங்களில் ஹீரோவாக்கியவர் அவருடைய நண்பரும் தயாரிப்பாளருமான ராவுத்தர்.

கேப்டனை பார்த்து மிரண்ட சூப்பர் ஸ்டார்

விஜயகாந்தின் வளர்ச்சியை சில சமயங்களில் ரஜினிகாந்த் பார்த்து பிரமித்ததும் உண்டு. தனக்கு நிகராக ஒரு நடிகர் வளர்ந்து வருகிறார் என்ற திகைப்பும் அவரிடம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் அதை மனதளவில் போட்டியாக கொள்ளாமல் தொழில் முனையில் போட்டிகளாக ஒரு ஆரோக்கிய போட்டியாகவே கொண்டு சென்றனர்.

viji1

vijayakanth rajini

விஜயகாந்தின் வளர்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பல நல்ல செயல்கள் மூலம் மக்களை மிகவும் கவர்ந்தார். அதனாலயே அரசியலில் அவரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவராக இதுவரை இல்லாத அளவிற்கு விஜயகாந்த் பார்க்கப்பட்டார். ஆனால் அவரின் உடல்நிலை காரணம் கருதி அவரால் இப்பொழுது அரசியலில் முன்பு இருந்த அளவு இருக்க முடியவில்லை.

நல்ல உள்ளங்கள்

மேலும் விஜயகாந்த் செய்த பல நல்ல செயல்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரிய வந்தாலும் ரஜினி மக்களுக்கு தெரியாமலேயே பல நல்ல விஷயங்கள் செய்துள்ளார் .ஆனால் இருவருமே மற்றவர்களுக்கு உதவுவதில் நல்ல மனப்பான்மை கொண்டவர்களாகவே இருந்து வந்தனர்.

viji2

rajini , captain

விஜயகாந்த் ரஜினிகாந்த் ஆகிய இருவரின் படங்களுமே குடும்ப பாங்கான படங்களாகவே அமைந்ததனால் குடும்பங்கள் கொண்டாடும் நடிகர்களாக வலம் வந்தனர். ஆனால் இருவருமே நடிப்புத் திறமைக்காக முன்னுதாரணமாக அமையவில்லை. ஆனால் இவர்களின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களாக ரஜினியின் முள்ளும் மலரும், விஜயகாந்தின் சின்ன கவுண்டர் என்ற படமும் அமைந்தன.

ரஜினிக்கும் கேப்டனுக்கும் உள்ள வித்தியாசம்

இந்த நிலையில் முன்பு நடிகர் மனோபாலா விஜயகாந்த், ரஜினிகாந்த் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதில் மனோ பாலாவிடம் ஒருவர் ரஜினிகாந்திற்கும் விஜயகாந்திற்கும் என்ன வித்தியாசம் எனக் கேட்டாராம். அதற்கு பதில் அளித்த மனோபாலா "ரஜினிகாந்த் பயங்கரமா கருப்பா இருப்பார் என்றும் விஜயகாந்த் கருப்பா பயங்கரமா இருப்பார்" என்றும் பதிலளித்தாராம்.

viji3

vijayakanth , rajinikanth

இவர் பேசிய இந்த தகவலை ஒருவர் அப்படியே டைப் செய்து கீழே மனோபாலா என்று பெயரிட்டும் விஜயகாந்திற்கு அனுப்பி வைத்தாராம். அந்த நேரத்தில் விஜயகாந்த் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார். கூடவே மனோபாலாவும் அந்தப் படத்தின் படப்பிடிப்பில் விஜயகாந்த் கூடவே இருந்தாராம். இந்த செய்தியை விஜயகாந்த் பிரித்துப் பார்த்ததும் மனோபாலாவிடம் என்ன இது? என்று கேட்டாராம். அதற்கு மனோபாலா "இது சும்மா காமெடிக்காக பேசியது, விடுங்க விடுங்க" என்று விஜயகாந்தை கூல் செய்தாராம்.

இதையும் படிங்க : பட்ஜெட்டே 9 கோடிதான்… ஆனா ஆடியோ லாஞ்சுக்கு 5 கோடி?… சாந்தனு பட தயாரிப்பாளரின் அட்ராசிட்டி…

Next Story