Cinema History
சிவாஜி ரசிகர்கள் இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோர் போலவே அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-சிவாஜி ஆகியோரின் திரைப்படங்கள் போட்டிபோட்டன. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜியின் மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார். தனது சொந்த சகோதரராகவே சிவாஜி மீது அன்பு கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர் மீது மரியாதை கலந்த அன்பு இருந்தது.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்குமிடையே இருக்கும் வேறுபாடு குறித்து பிரபல மருத்துவரும் சிவாஜியுடன் நெருங்கி பழகியவருமான டாக்டர். காந்தராஜ் ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் அளவுக்கு சமமான ரசிகர்கள் இருந்தார்களாம். ஆனால் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்குமிடையே இருந்த வேறுபாடு என்னவென்றால்,எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எம்.ஜி.ஆர் திரையில் என்ன செய்தாலும் பார்த்துவிடுவார்களாம். லாஜிக்கெல்லாம் பார்க்கமாட்டார்களாம். எம்.ஜி.ஆர் என்ன செய்தாலும் சரி என்ற எண்ணம் கொண்டவர்களாக இருந்தார்களாம்.
ஆனால் சிவாஜி ரசிகர்கள் லாஜிக் பார்த்தார்களாம். சில நம்பமுடியாத காட்சிகள் இருந்தால் அந்த படத்தை ஏற்கமாட்டார்களாம்.
இதையும் படிங்க: “இனிமேல் சினிமால நடிக்கக்கூடாது”… பாரதிராஜா படத்தை பார்த்து எம்.ஜி.ஆர் எடுத்த வினோத முடிவு… ஏன் தெரியுமா??
அதே போல் எம்.ஜி.ஆருக்கு அப்போதே பத்து லட்சத்திற்கும் மேல் ரசிகர்கள் இருந்தார்களாம். ஒரு எம்.ஜி.ஆர் படம் வெளியானது என்றால் அவரின் ரசிகர்கள் அத்தனை பேரும் பார்த்துவிடுவார்களாம்.
ஆளுக்கு ஒரு ரூபாய் டிக்கெட் வைத்தாலும் பத்து லட்ச ரூபாய் வசூல் பார்த்துவிடுவாராம் எம்.ஜி.ஆர். மேலும் எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் எப்படி இருந்தாலும் பார்த்துவிடுவார்களாம். ஆனால் சிவாஜி ரசிகர்கள் அப்படி இல்லையாம். படம் நன்றாக இல்லை என்றால் அந்த படத்தை அப்படியே கைவிட்டு விடுவார்களாம்.