Connect with us
MGR

Cinema History

அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களை இயக்கிய இயக்குனர் இவர்தான்… எத்தனை படங்கள் தெரியுமா?

புரட்சி தலைவர், மக்கள் திலகம் என ரசிகர்களால் போற்றப்படும் எம்.ஜி.ஆர், சினிமா துறைக்குள் நுழைவதற்கு முன்பு நாடகத் துறையில் பல நாடகங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்துதான் 1936 ஆம் ஆண்டு “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் சிறு வேடத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு  கதாப்பாத்திரத்தில் நடித்த எம்.ஜி.ஆர், 1947 ஆம் ஆண்டு வெளிவந்த “ராஜகுமாரி” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடித்தார்.

MGR

MGR

இதனை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகனாக ஜொலித்த எம்.ஜி.ஆர், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். குறிப்பாக எளிய மக்களின் பாத்திரங்களை ஏற்று நடித்து அவர்களில் ஒன்றாகிப்போனார் எம்.ஜி.ஆர். இந்த போக்கு அவரின் அரசியல் பாதைக்கான வடிக்காலாக அமைந்தது.

சாகும்வரை முதல்வர்

இவ்வாறு பல திரைப்படங்களின் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கமாகிப்போன எம்.ஜி.ஆர், 1977 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின் தனது உயிர் பிரியும் வரை எம்.ஜி.ஆரே முதல்வராக திகழ்ந்தார். அந்த அளவுக்கு ஒவ்வொருவரின் மூச்சிலும் கலந்திருந்தார் எம்.ஜி.ஆர்.

MGR

MGR

மலையாளத் திரைப்படம்

எம்.ஜி.ஆர் கிட்டத்தட்ட 130க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் அவர் நடித்த ஒரே வேற்று மொழி திரைப்படம் “ஜெனோவா” என்ற திரைப்படம்தான். மலையாளத்தில் உருவான இத்திரைப்படம் 1953 ஆம் ஆண்டு வெளியானது. அதே போல் இத்திரைப்படம் தமிழிலும் வெளியிடப்பட்டது.

Genova

Genova

இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படங்கள்

எம்.ஜி.ஆர் “நாடோடி மன்னன்”, “கலையரசி”, “எங்க வீட்டுப் பிள்ளை”, “குடியிருந்த கோவில்”, “அடிமைப் பெண்” போன்ற பல திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு எம்.ஜி.ஆர் மொத்தம் 17 திரைப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தடைகளை மீறி வெளிவந்த விஜய் திரைப்படங்கள்… அடேங்கப்பா!! லிஸ்ட் பெருசா போகுதே…

MGR

MGR

அதிக திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்

எம்.ஜி.ஆர் நடித்த 130க்கும் அதிகமான திரைப்படங்களில் அவரை வைத்து அதிக திரைப்படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன். “சக்ரவர்த்தி திருமகள்”, “திருடாதே”, “கொடுத்து வைத்தவள்”, “காவல்காரன்”, “கண்ணன் என் காதலன்”, “மாட்டுக்கார வேலன்” என எம்.ஜி.ஆரை வைத்து 17 திரைப்படங்களை  இயக்கியுள்ளார்.

MGR and P.Neelakandan

MGR and P.Neelakandan

எம்.ஜி.ஆரை வைத்து மிக அதிக திரைப்படங்களை இயக்கிய பெருமை ப.நீலகண்டனையே சேரும்.

 

சின்னப்பா தேவர்

Chinnappa Thevar and Thirumugam

Chinnappa Thevar and Thirumugam

பிரபல தயாரிப்பாளரான சாண்டோ சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆருடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர். இந்த நிலையில் சின்னாப்பா தேவரின் தம்பியான எம். ஏ. திருமுகம் “தாய்க்குப் பின் தாரம்”, “தாய் சொல்லை தட்டாதே”, “குடும்பத் தலைவன்”, “தாயை காத்த தனையன்”, “தர்மம் தலை காக்கும்”, “நீதிக்கு பின் பாசம்” போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவ்வாறு எம்.ஏ. திருமுகம், எம்.ஜி.ஆரை வைத்து 16 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top