தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். வயது 72 கடந்தும், இன்னும் மாஸ் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருப்பவர். மிக விரைவில், இவரது நடிப்பில் வெளிவர உள்ள ஜெயிலர் படத்தை ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்திருக்கின்றனர்.
ரஜினிக்கு நேர்ந்த அனுபவம்
ரஜினி மிக வெளிப்படையான மனிதர். ஆன்மிக நாட்டம் கொண்டவர். மனதில் இருப்பதை யதார்த்தமாக வெளிப்படுத்தி பேசுபவர். ரஜினிக்கு மதுப்பழக்கம், புகைப்பழக்கம் உண்டு. அதை எந்த இடத்திலும் அவர் மறைத்தது இல்லை. அப்படிப்பட்ட ரஜினி, ஒரு பேட்டியில் தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார்.
போதையில் இருந்த ரஜினி
ஒரு நாள் வீட்டில் இருக்கும்போது எனக்கு போன் வருகிறது. சார் ஒரு ஷாட் பாக்கி இருக்கிறது, டைரக்டர் சார் வரச்சொன்னார் என்கின்றனர். எனக்கு ஆடிப்போயிடுச்சுத. ஏன்னா, தண்ணீ போட்டிருக்கேன். அப்புறம் என்னடா பண்றதுன்னு உடனடியா பிரஸ் பண்ணி, குளிச்சிட்டு, ஸ்பிரே எல்லாம் அடிச்சிக்கிட்டு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டேன். மேக்கப் போட்டுகிட்டேன். டைரக்டர் கிட்ட பக்கத்துல போகாம நிக்குறேன். ஆனா, ஸ்மெல்லை வெச்சு அவர் கண்டுபிடிச்சுட்டாரு.
தனியறைக்கு அழைத்த டைரக்டர்
உடனே, என்னை தனியறைக்கு கூப்பிட்டார், நான் பயந்தபடி தான் போய் உட்கார்ந்தேன். நாகேஷ் தெரியுமா உனக்கு, எப்பேர்ப்பட்ட ஆர்ட்டிஸ்ட் தெரியுமா? ஆனா தண்ணீ போட்டு அவன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணீட்டு இருக்கான். அவன் முன்னால நீ ஒரு எறும்பு கூட சமம் இல்லே. இனிமே நீ தண்ணீ போட்டேன்னு தெரிஞ்சுது, நடக்கறதே வேற என்று என்னை திட்டினார்.
மேக்கப்பில் இருந்தால் தொடுவதில்லை
அதுக்கு அப்புறம், இதுவரைக்கும் நான் மேக்கப்ல இருக்கும் போது, ஜம்மு காஷ்மீர் அங்கே இங்கேன்னு எங்க எவ்வளவு குளிரா இருந்தாலும், ஒரு சொட்டு தண்ணீ கூட சாப்பிட்டது இல்லே, அன்னிக்கு விட்டதுதான். அதுக்கு காரணம், டைரக்டர் பாலசந்தர் அன்று சொன்னதுதான் என, கூறி இருக்கிறார் ரஜினிகாந்த்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…