மிகவும் இளம் வயதில் சினிமாவில் அறிமுகமான நடிகர்களில் நவரச நாயகன் கார்த்திக்கும் ஒருவர். அப்போதெல்லாம் பிரசாந்த், கார்த்தி மாதிரியான நடிகர்கள் தங்களது17, 18 வது வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகிவிட்டனர்.
நடிகர் கார்த்திக் 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுகமான அடுத்த வருடமே அவர் நடிப்பில் 10 படங்கள் வெளியாகின. அந்த அளவிற்கு மிக குறுகிய காலத்தில் பிரபலமானார் கார்த்திக்.
நடிகர் கார்த்திக்கு வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி கார்த்திக்கை வைத்து பல படங்களை இயக்கியுள்ளார். சுந்தர் சி இயக்குனராக இருந்த காலத்தில் அவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் சுராஜ்.
சுராஜ் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் பல படங்களை இயக்கினார் சுந்தர் சி. சுந்தர் சியின் திரைப்படங்களில் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே முழுக்க முழுக்க நகைச்சுவை காட்சிகளுடன் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தார் சுந்தர் சி.
அதனையடுத்து உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் வேலைகள் துவங்கியது. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்திற்கு சுந்தர் சி திரைக்கதை,வசனம் எதுவுமே எழுதவில்லையாம். படப்பிடிப்பை துவங்கிவிட்டு அப்போது தோன்றும் வசனங்களை பேசி காட்சியை எடுத்துவிடுவாராம்.
இப்படியே முழு படத்தையும் இயக்கியுள்ளனர். ஆனால் அந்த படம் அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் பெரும் ஹிட் கொடுத்தது. இப்போதுள்ள தலைமுறையினரும் ரசிக்கும் வகையில் உள்ளது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…