Categories: Cinema History Cinema News latest news

ஏ.ஆர்.ரகுமானுக்கே பிடிக்காத பாட்டு!.. ஆனால் மாஸ் ஹிட்!.. எல்லாம் அந்த இயக்குனர் செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் இசைப்புயல் என அனைவராலும் அறியப்படுபவர் ஏ.ஆர் ரகுமான். ஏனெனில் சினிமாவிற்கு வந்தவுடனேயே புயல் வேகத்தில் பிரபலமானார் ஏ.ஆர் ரகுமான். அதுவரை தமிழ் சினிமாவில் இருந்த இசையில் இருந்து முற்றிலும் மாறுதலான ஒரு இசையை ஏ.ஆர் ரகுமான் கொண்டு வந்தார்.

அனைத்து பாடல்களையும் இசையமைத்த பிறகு ஏ.ஆர் ரகுமான் ஒருமுறை கேட்டு பார்ப்பார். அது அவருக்கு பிடிக்கவில்லை எனில் அதை இயக்குனரிடம் கொடுக்க மாட்டார். இப்படி ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வெளிவராமல் இருக்கும் பாடல்கள் ஏராளம்.

AR Rahman

தற்சமயம் இயக்குனர் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல திரைப்படம் தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் கிருஷ்ணாவை குறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். அந்த படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைத்துள்ளார். அந்த சமயத்தில் படத்தில் ஒரு காதல் காட்சிக்கு டூயட் பாடல் இசையமைக்க வேண்டும் என கேட்டுள்ளார் கிருஷ்ணா.

ஹிட் அடித்த பாடல்:

ஏ.ஆர் ரகுமானும் ஒரு பாடல் இசையமைத்துள்ளார். ஆனால் அதை கேட்டு பார்க்கும்போது ரகுமானுக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. ஆனால் கிருஷ்ணாவிற்கு அந்த பாடல் பிடித்துவிட்டது. இது ஏதோ சோக சங்கீதம் போல இருக்கிறது, நாம் வேறு மியூசிக் போட்டுக்கலாம் என ஏ.ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

mube vaa song pic

இல்லை இந்த இசைதான் வேண்டும் என அதையே படத்தில் பாடலாக வைத்துள்ளார் கிருஷ்ணா. முன்பே வா என் அன்பே வா என்கிற அந்த பாடல்தான் படத்திலேயே பெரும் ஹிட் கொடுத்தது. அப்படி ஒரு இசை அறிவு கொண்டவர் கிருஷ்ணா என ஏ.ஆர் ரகுமான் அவரை புகழ்ந்துள்ளார்.

Published by
Rajkumar