Connect with us
Goundamani

Cinema History

கவுண்டமணியையே அழ வைத்த இயக்குனர்… டகால்டிக்கே டகால்டியா?.. அப்படி என்னதான் நடந்தது?..

நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணியைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய தேவையில்லை. அவரே நக்கல், நய்யாண்டி பண்ற ஆளு. அவரையே ஒரு இயக்குனர் கதை சொல்லி அழ வைத்தார் என்றால் அது எப்படி என்பதை அறிய ஆவல் தானே. வாங்க பார்க்கலாம். இது குறித்து இயக்குனர் வி.சேகர் என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

கவுண்டமணி ஒரு வகையில் புரட்சிகரமான ஒரு கம்யூனிஸ்ட்வாதி. நீங்களும் ஹீரோதான் பண்ணும்போது எங்கிட்ட பணம் கிடையாது. புரொடியூசர் சாதாரணமானவர். அப்போ நிழல்கள் ரவிக்கு மட்டும் தான் ஏதோ சம்பளம் கொடுக்குறோம். படம் பார்க்கறதுக்கு காமெடி வேணும்ல. அதுக்காக கவுண்டமணி, செந்திலைப் போயி பார்க்குறேன்.

Neengalum hero than

Neengalum hero than

அவங்க கொஞ்சம் பிசியாகிட்டாங்க. ஒரு நாளைக்கு ஒரு ரூபா. அவங்ககிட்ட போறேன். பாக்கியராஜிக்கிட்ட இருந்து வந்தேன்கறது ஒரு மரியாதை. கதை சொல்றேன். சினிமாவுல வந்து ஹீரோவாகணும். அந்த ஒரு பாயிண்ட் அவனுக்குப் புடிச்சிருந்தது. அதனால தான் கால்ஷீட் தந்தாரு.

சினிமாவுல உள்ள ஹீரோக்களுக்குப் பாட வராது. பைட் சீன் முழுசா பண்ணத் தெரியாது. டூப்பை வச்சித்தான் எல்லாம் பண்ணுவாங்க. ஆனா டிராமா ஆர்டிஸ்ட்டுக்கு எல்லாம் தெரியும். ஒரே ஆளு தான் அவன் பாடுவான். அவனே வில்லன் வேஷம் போடுவான். கதாநாயகனாகவும் நடிப்பான். யாராவது ஒருத்தர் வரலைன்னா பொம்பளை வேஷம் போடுவான். அது ஆச்சரியமா இருக்கும்.

இதையும் படிங்க… நல்லா ஊத்துக்குளி வெண்ண போல இருக்க!. விஸ்வாசம் நடிகைக்கு குவியும் லைக்ஸ்!…

மொத்தமா என்ன கொடுப்பாங்கன்னா 500 ரூபா, 5 மரக்கா நெல்லு, துணி கொடுப்பாங்க. ஆனா இங்க இருக்குற ஹீரோக்களுக்குப் பாட வராது. ஆனா இவங்களுக்குத் தான் சம்பளம் அதிகம். ஆனா கிராமத்துல இருந்து தெருக்கூத்துல நடிச்சி வந்தவங்க நீங்க. உங்களுக்கு ஆடத்தெரியும். பாடத்தெரியும். அது தெரியும். எல்லாமே பண்ணுவீங்க.

மியூசிக் கூட தொடையைத் தட்டிப் பாட்டுப் பாடுவீங்க. அதைக் காமிக்கணும்னு ஆசை. யோவ்… நான் நாடகத்துல இருந்து சினிமாவுக்கு வந்தவன்யா. நாடகத்துல இருக்கும்போது ஒருவேளை தான்யா நான் சாப்பிட்டேன். என்னா கஷ்டம்யா. சினிமாவுல வந்து தான்யா இந்த மாதிரி எல்லாம் ஆச்சுன்னு அப்படியே அழ ஆரம்பிச்சிட்டார் கவுண்டமணி என்கிறார் இயக்குனர் வி.சேகர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top