Connect with us
Santhana Bharathi, Kamal

Cinema History

குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்! கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!..

கமல் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கோணத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் குணா. படத்திற்கு கமர்ஷியல் ரீதியாக வரவேற்பு இல்லை என்றாலும் இது ஒரு கலைப்படமாக பேசப்பட்டது. இந்தப் படம் குறித்து இயக்குனர் சந்தானபாரதி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

மஞ்சுமல் பாய்ஸ்சில் நாங்க ஒரிஜினலா பண்ண குகையில் எடுக்கல. ஆனா அந்த செட்டை அற்புதமா பண்ணிருக்காங்க. 34 வருஷம் கழிச்சி இந்தப் படம் மூலமா பேசப்படுதுன்னா குணா படத்திற்கு ரொம்பவே பெருமை தான்.

மஞ்சுமல் பாய்ஸ் படம் பார்த்துட்டு வந்து நிறைய பேர் எங்கிட்ட ‘சார் நீங்க தானே குணா படம் எடுத்தீங்க… எப்படி சார் அந்தக் குகைல எல்லாம் எடுத்தீங்க?’ன்னு கேட்டாங்க. அதுவே எனக்கு பெருமை தானே.

Manjummal Boys

Manjummal Boys

குணா படம் பெரிய அளவில் கமர்ஷியல் ரீச் இல்லை. ஆவரேஜா போனது. கிரிட்டிகலா அதைப் படமாக்கும்போது ரொம்ப வித்தியாசமான படம். நானும், கமல் சாரும் எப்பவுமே சக்ஸஸை எதிர்பார்த்து படம் கொடுக்கறதில்ல. நல்ல படம் கொடுக்கணும். அவ்வளவு தான். அதை ஜனங்க ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் அவங்க விருப்பம். ஆனா திரும்பவும் முயற்சி பண்றதை விடக்கூடாது என்கிறார் சந்தான பாரதி.

மலையாளத்துல 10 படங்கள் வெரைட்டியா வந்ததுன்னா தமிழ்ல 2 படங்கள் தான் இப்படி வருது. அதனால அப்படிப்பட்ட படங்களை அவங்க ரசிப்பதில் தவறு இல்லை. நாங்க முதன் முதலா குகைக்குள்ள போகும்போது பெரிய அளவில் பயமே இல்லை. கைடு பள்ளம் மேடு இருக்கும் பார்த்துப் போங்கன்னு சொன்னாரு. அந்தக் குகைக்குள்ள போக வேண்டாம்னு நான் தான் கமல் கிட்ட சொன்னேன்.

நாலுபேரு உள்ளே இறங்கிப் போறதுக்கே நிறைய ரெடி பண்ண வேண்டியிருக்கு. 100 பேரு வந்தால் தான் சூட்டிங் எடுக்க முடியும். எல்லாக் கருவிகளையும் தூக்கிட்டு வரணும். உள்ளே இறக்கணும். அப்படின்னா எவ்ளோ நேரம் ஆகும்?

அதற்கு கமல் ‘ செக்யூரிட்டி இருந்தா பண்ணிடலாமா?’ன்னு கேட்டார். அதற்கு அப்புறம் பாதுகாப்பு செய்ததுக்குப் பிறகு தான் குகைக்குள்ள போயி படம் எடுத்தோம். 54 வருடம் கமலுக்கும் எனக்கும் நட்பு எனகிறார் இயக்குனர் சந்தானபாரதி.

google news
Continue Reading

More in Cinema History

To Top