More
Categories: Cinema History Cinema News latest news

ஹீரோவுக்காக உஸ்மான் ரோட்டில் சுற்றிய இயக்குனர்… எல்லாத்துக்கும் நம்ம சாக்லேட் பாய்தான் காரணம்…

சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்கும், இயக்குனருக்கும் தங்களது முதல் படம் என்பது மிக முக்கியமானதாகும். ஏனெனில் முதல் படம் ஒழுங்காக ஓடவில்லை என்றால் அது அவர்களின் ஒட்டு மொத்த சினிமா வாழ்க்கையையே பாதித்துவிடும்.

அதிர்ஷ்டவசமாக நிறைய நடிகர்களுக்கு முதல் படம் வெற்றி படமாக அமைந்துள்ளது. அப்படி வெற்றி படமாக நடித்த நடிகர்களில் நடிகர் பிரசாந்தும் ஒருவர். ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என தமிழ் சினிமாவில் அழைக்கப்பட்டவர். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்.

Advertising
Advertising

Prashanth

அவருக்கு முதல் படமாக அமைந்த படம் வைகாசி பொறந்தாச்சு. இந்த படம் தமிழ் சினிமாவில் நல்ல ஹிட் கொடுத்தது. ஆனால் அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை பிரசாந்திற்கு ஹீரோவாக வேண்டும் என்கிற ஆசையே இல்லை. அவர் மருத்துவராக வேண்டும் என்பதையே தனது கனவாக கொண்டிருந்தார்.

அப்போது உஸ்மான் ரோட்டில் உள்ள ஒரு கராத்தே ஸ்கூலில் கராத்தே பயின்று வந்தார் பிரசாந்த். அந்த சமயத்தில்தான் இயக்குனர் ராதா பாரதி தனது படத்திற்காக கதாநாயகனை  தேடி வந்தார். புது முகத்தைதான் கதாநாயகனாக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார் ராதா பாரதி. அப்போது எதேர்ச்சையாக பிரசாந்தை பார்த்துள்ளார் ராதா பாரதி.

ஆனால் அப்போது அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் அவரைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும் என உஸ்மான் ரோடு பகுதி முழுவதும் அவரை தேடி சுற்றி கண்டுப்பிடித்துள்ளார் இயக்குனர். அதன் பிறகுதான் அவர் நடிகர் தியாகராஜனின் மகன் என்பது இவருக்கு தெரிந்துள்ளது.

அதன் பிறகு படமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் அவர்கள் இருவருக்குமே முக்கியமான படமாக அமைந்தது.

இதையும் படிங்க:‘வானத்தைப் போல’ வெற்றிக்கு கேப்டன் சொன்ன சீக்ரெட் தான் காரணம்!.. இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..

Published by
Rajkumar

Recent Posts