AO, Vijayakanth
பிரசாந்தைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் ராதாபாரதி. மணிவண்ணனிடம் 4 படங்களில் உதவி இயக்குனராக இருந்தார். இவர் இயக்கிய முதல் படம் வைகாசி பொறந்தாச்சு.
தமிழில் 6 படங்களையும், கன்னடத்தில் ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். இவர் தனது திரையுலக அனுபவங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் தெரிவித்துள்ளார்.
அந்தக்காலத்தில பத்தாம் கிளாஸ் படிச்சா, “ஆத்தா நான் பாஸாயிட்டேன்”னு கிராமத்துல சொல்லிக்கிட்டு ஓடி வருவாங்க. அதைத் தான் என்னோட முதல் படத்துல டயலாக்கா வச்சிருந்தேன். வைகாசி பொறந்தாச்சு படத்துல பிரசாந்த் சொல்லிக்கிட்டு ஓடி வருவாரு. நான் அந்தக்காலத்துல நிறைய பேச்சுப்போட்டிகள்ல கலந்துக்கிட்டு பரிசுகள் எல்லாம் நிறைய வாங்கிட்டு வருவேன்.
எங்க ஆத்தாக்கிட்ட பெருமையா கொண்டு வந்து காட்டுவேன். போய் அந்த பீரோவுக்குப் பின்னாடி போடுறான்னு அசால்டா சொல்வாங்க எனவும் யதார்த்தமான காமெடியைச் சொல்கிறார் இயக்குனர் ராதாரவி.
பாரதிராஜாவோட முகத்தைப் பார்க்க தவம் கிடப்பேன். ஆனா முதுகையும், பாதத்தையும் தான் பார்க்க முடியும். அவருடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கலன்னாலும், அவரோட சிஷ்யரோடு சேர்ந்து உதவி இயக்குனராக வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. அலைகள் ஓய்வதில்லை படத்தை 500 தடவை பார்த்திருப்பேன். மிண்ட் கிருஷ்ணா தியேட்டர்ல. அந்தப் படத்தில உள்ள வசனம் எல்லாம் மனப்பாடம் ஆயிட்டு.
மணிவண்ணன் சார் தான் அந்தப் படத்துல ஒரு டயலாக் சொல்றாரு. அதாவது கார்த்திக்கோட அம்மா ‘ஆம்பளைங்க இல்லாத வீடுன்னு தானே இத்தனை பேரு வந்து எங்களை அதட்டுறீங்க’ன்னு ஒரு டயலாக் சொல்வாங்க. இந்த டயலாக் எழுதுறதுக்கு முன்னாடி நிறைய டயலாக் எழுதி மணிவண்ணன் பாரதிராஜாவிடம் கொடுத்தாராம்.
இதையும் படிங்க… ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…
“இது இல்லையா… இது இல்லையா”ன்னு கிழிச்சிப் போட்டுருவாராம். கடைசியாக அவர் கொடுத்த இந்த டயலாக்கைப் பார்த்ததும், “இதத் தான்யா எதிர்பார்த்தேன்”னு சொன்னாராம்.
“எந்த டைரக்டர்கிட்ட சேரணும்?”னு விஜயகாந்த் எங்கிட்ட கேட்டார். அப்போ மணிவண்ணன் சார்னு சொன்னேன். அப்போ நூறாவது நாள் படம் வெளியாகி சக்கை போடு போட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…