More
Categories: Cinema History Cinema News latest news

இயக்குனரின் பிடிவாதம்… கேரவன் இல்லாமல் உடை மாற்றிய நயன்தாரா… நடந்தது இதுதான்..!

2005ல் வெளியான சூப்பர்ஹிட் படம் கஜினி. ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா உடலை வருத்திக் கொண்டு நடித்த படம். இந்தப் படத்தின் ரீ ரிலீஸ் சூர்யாவின் பிறந்தநாளன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் படத்தைப் பற்றிய சுவாரசியமான சில விஷயங்களை வலைப்பேச்சு அந்தனன் பகிர்ந்தள்ளார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்!.. அஜித் ரூட்டில் ஆட்டோ ஓட்டும் ஏ.ஆர். முருகதாஸ்!.. பாவம் அவர்!..

கஜினி படத்தில் ஒரு காட்சி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்ததாம். அப்போது நயன்தாராவை வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சி. அப்போது முருகதாஸ் கட் கட் கட்னு சொன்னாராம். ஏன்னா நயன்தாரா ஓடி வரும்போது ரொம்ப ஆபாசமாக இருந்ததாம். அவங்க போட்டுருந்த ஷர்ட் ரொம்ப லூஸா இருந்ததாம்.

அதனால ஓடி வரும்போது ரொம்ப ஆபாசமா இருந்துருக்கு. (பம்பாய் படத்துல உயிரே சாங்ல மனீஷா கொய்ராலா ஓடி வர்ற மாதிரி இருந்துச்சாம்.) அதனால டைட்டான ஷர்ட் அவங்களுக்குக் கொடுக்கணும்னு அசோசியேட் டைரக்டர் மூலமா நயன்தாராவுக்கு சொல்லச் சொன்னாராம். அப்படி ஒரு உள்ளாடை டைட்டா போட்டுருக்கணும்.

‘என்னங்க இப்படி கடைசி நேரத்துல சொல்றீங்க… அதுக்கு இங்க கேரவனும் இல்ல. மாற்று ஆடையும் எடுத்துட்டு வரல…’ன்னு சொல்லிட்டாங்க. ஆனா முருகதாஸ் மட்டும் உறுதியா ‘இந்த மாதிரி என்னால எடுக்கவே முடியாது’ன்னு சொல்லிட்டாராம்.

நயன்தாராவும் அதை எடுத்துச் சொன்னதும், ‘சரிங்க… நான் வந்து ரொம்ப காஸ்ட்லியான டிரஸ் எல்லாம் கேட்கல. லோக்கல்ல ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சாலும் வாங்கிட்டு வாங்க. நான் போட்டுக்கறேன்..’னு சொல்லிட்டாராம்.

இதையும் படிங்க… பிரச்சனை சிம்பு இல்ல.. அவங்க அப்பா அம்மா தான்! மனம் திறந்த இயக்குனர்

அப்படி வாங்கி வந்த டிரஸ்ஸை ஒரு காருக்குப் பின்னாடி நின்னு டிக்கியைத் திறந்து மறைவா ஒரு பத்து நிமிஷத்துக்குள்ள டிரஸ் மாத்திட்டு வந்து நின்னாராம் நயன்தாரா. அந்த அளவு அவர் படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்கிறார் வலைப்பேச்சு அந்தனன்.

Published by
sankaran v

Recent Posts