ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்... கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?

by sankaran v |   ( Updated:2024-11-19 20:41:24  )
nayanthara
X

nayanthara

உண்மையைச் சொல்லப் போகணும்னா அது கல்யாண கேசட்டே கிடையாது. கல்யாணம்னாலே சுவாரசியம் தான். நயன்தாரா, விக்னேஷ் சிவனின் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்த முடிவு பண்ணி நெட்பிளிக்ஸ் கிட்ட 8 கோடி ரூபாய்க்கு விற்க முடிவு பண்ணினாங்க.

ஆனா ஃபுட்டேஜை எல்லாம் பார்க்கும்போது நெட்பிளிக்ஸ்சுக்கு நினைச்ச மாதிரி பெரிய திருப்தி இல்லை. அதனால அவங்க இதை வேணாம்கற முடிவுக்கு வந்துட்டாங்க என்கிறார் பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி. இவர் நயன்தாரா குறித்து வேறு என்னென்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

நெருக்கடி

நயன்தாராவுக்கு நெருக்கடி வந்தது. என்னன்னா ஒரு பெரிய தொகையை அட்வான்ஸா வாங்கிட்டாங்க. அதுக்கு அப்புறமா வர்ற தொகையையும் அவங்க இழக்க விரும்பல. அதனால பேசி அதை ஒரு ஆவணப்படமா எடுத்து அது கூட கல்யாணத்தையும் சேர்த்துட்டாங்க. இன்னொன்னு பார்த்தீங்கன்னா அதை ஒரு ஆவணப்படமாவே எடுக்க முடியாது. என்னன்னா அதை 3வது மனிதர் தான் எடுக்க வேண்டும். அவங்க தான் இவங்களைப் பத்தி சொல்லணும்.

ஒர்க்கிங் வீடியோ

ஆனா இவங்களே எடுத்து இவங்களே பெருமையாப் பேசுறது ஆவணப்படம் இல்லை. விக்னேஷ் சிவன் உலகத்துலயே சிறந்த பெண் நயன்தாராங்கற மாதிரி பேசுவாரு. தனுஷ் என் படத்துல உள்ள ஃபுட்டேஜைத் தான எடுக்கக்கூடாதுன்னு சொன்னாருன்னு இவங்க பிரிலியண்டா ஒர்க்கிங் வீடியோவை எடுத்துருக்காங்க.

தனுஷூக்கு சாதகம்

Also read: தயவுசெய்து மூளைய கழட்டி வச்சிட்டு படம் பார்க்க வாங்க.. கமல் படத்த கலாய்த்த இயக்குனர்

ஆனா என்ன தப்பு பண்ணிருக்காங்கன்னா அவங்க அணிந்து இருப்பது நானும் ரௌடிதான் படத்துல உள்ள காஸ்டியூம் தான் அது. அதனால தனுஷ் கோர்ட்ல கேஸ் போட்டா அவருக்கு சாதகமாகத் தான் இருக்கும். அதுல கிடைக்கிற பணம் தனுஷூக்குத் தேவையில்லை.

ஈகோ

இரண்டு பேருக்கும் உள்ள ஈகோ தான் இதுக்குக் காரணம். தனுஷைப் போய் நான் ஏன் பார்க்கணும்? அவரை என் ஆபீஸ்சுக்கு வரச் சொல்லுங்கன்னு வேற நயன்தாரா சொன்னாராம். நயன்தாராவுடைய ஆவணக்கடிதம் என்பது அந்தப் படத்துக்கு ஒரு பப்ளிசிட்டி தான்.

பிரபுதேவா டேமேஜ்

Nayanthara prabhudeva

Nayanthara prabhudeva

வீடியோவை முதலிலேயே எடுத்துப் பயன்படுத்திய பிறகு என்ஓசி கேட்டு வந்தது தான் தனுஷூக்குக் கோபத்தை வரவழைத்ததாம். அதற்கு முன்பே கேட்டு இருந்தால் இவ்வளவு பிரச்சனை வர வாய்ப்பு இல்லை. ஆவணப்படத்துல நிறைய சம்பவங்கள் இல்லை. பிரபுதேவாவை டேமேஜ் பண்ணிக் காட்டியது போல சிம்புவை மறைச்சிட்டாங்க.

உண்மை பேசலை

உண்மையை எடுக்குறதுதான் ஆவணப்படம். இன்னொன்னு ஆரம்பத்துல அவங்க கஷ்டப்பட்ட மாதிரி எதுவும் வரலை. ஆரம்பத்தில் சரத்குமார், ரஜினி போன்ற சீனியர் நடிகர்களுக்குத் தான் ஜோடியாக நடித்தார்.

Also read: ARRahman: அவரை ‘நேசிக்கிறேன்’ ஆனாலும்… பிரிவதற்கான காரணத்தை அறிவித்த சாய்ரா

அதைப் பற்றி எல்லாம் பேசலை. ஐயா படத்து ஆடிஷனுக்கு சென்னைக்கு வர்றாங்க. கேரளாவில இருந்து ஆம்னி பஸ்ல கோயம்பேடுக்கு வர்றாங்க. அன்றைக்கு அப்படி வந்ததை மறந்துட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story