‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்துக்கு இவரா டப்பிங் கொடுக்கிறார்? ஏற்கெனவே ஹிட் ஆன வாய்ஸ்பா..

Published on: July 22, 2023
sanjay
---Advertisement---

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ திரைப்படம். தமிழ் சினிமாவில் தயாராகி வரும் பெரிய படங்களிலியே லியோ படம் தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் இந்தப் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

sanjay1
sanjay1

இந்த எதிர்பார்ப்பு தான் படத்தின் வியாபாரத்தையும் அதிகரித்திருக்கின்றன. வெளிநாடு மற்றும் கேரளா திரையரங்க விநியோக உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இதற்கு முன் ரஜினியின் 2.0 படத்தின் வியாபாரத்தை லியோ படம் முறியடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : ரஜினி படத்தில் வரும் சூப்பர் வசனம் சுட்டதா?!.. அதுவும் அந்த நடிகர்கிட்ட இருந்தா?!.. சீக்ரெட் சொன்ன ராதாரவி…

வெளிநாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆர்.ஆர்.ஆர் மற்றும் சலார் இந்த படங்களுக்குப் பிறகு லியோ திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம். ஏற்கனவே தயாரிப்பாளர்களுக்கு ஒரு லாபகரமான படமாகவே இந்த படம் அமைந்திருக்கின்றது. விஜயின் பான் இந்தியா வெளியீடு படத்தின் வியாபாரத்தை உச்சத்தை எட்டி இருக்கிறது.

sanjay2
sanjay2

அது மட்டும் இல்லாமல் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய அளவிலான வசூலை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறதாம். சொல்லப்போனால் விஜயின் சினிமா கரியரிலையே இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத அளவு ஒரு மாபெரும் வெற்றியையும் வசூலையையும் அள்ளித்தரும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ படத்தில் விஜயின் டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாம்.

ஏற்கனவே மல்டி ஸ்டாரர் படமாக அமையும் இந்த லியோ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பதால் ஒவ்வொரு நடிகர்களுக்கான டப்பிங் வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே சஞ்சய் தத்துக்கு டப்பிங் கொடுக்க யாருடைய வாய்ஸை கொடுக்கலாம் என தேடிக் கொண்டிருக்கிறார்களாம். கே ஜி எஃப்பில் சஞ்சய் தத்துக்கு டப்பிங் கொடுத்தவரின் வாய்ஸ் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

sanjay3
sanjay3

அவரையே இந்த லியோ படத்திலும் சஞ்சய் தத்துக்கு டப்பிங் கொடுக்க வைக்கலாமா என படக் குழு ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதையும் படிங்க : அஜித்தின் முகத்தில் குத்திய பத்திரிக்கையாளர், கடுப்பாகி அஜித் எடுத்த அதிரடி முடிவு- பத்திரிக்கையாளர் சொன்ன பரபரப்பு தகவல்

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.