மறைந்த சிவாஜி கணேசன் 1952-ல் பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். மேலும், பராசக்தி படத்தில் நடிக்கும் போதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம் முடிநது விட்டது.
அதாவது, தனது சொந்தகார பெண்ணான கமலா என்பவரை கடந்த 1952 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரு மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் இரு மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர் உள்ளனர். நடிகர் சிவாஜி கணேன் திரையுலகில் நடிக்கும்போதே பல சொத்துக்களை வாங்கியுள்ளார். இப்பொது, அவரது வாரிசுகள் தான் அதனை அனுபவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சிவாஜி கணேசனுக்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் கொண்டவர் என்பதால் தனது பெற்றோருடைய தம்பி வி .சி. சண்முகம் மற்றும் அண்ணன் வி .சி. தங்கவேலு ஆகியோருடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார். இவரது மகன் பிரபு புகழ் பெற்ற தமிழ் சினிமா நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்.
இதையும் படிங்களேன் – ஒரு நாளைக்கு 35 பீர்.. 1 லட்சம் செலவு.. மிரண்டு போன மிர்ச்சி சிவா படக்குழு…
தற்போது, சிவாஜி கணேசன் சேர்த்து வைத்த சொத்துக்களை பிரிப்பதில் மனக்கசப்பு ஏற்பட்டதால் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது அவரது சகோதரிகள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும், அந்த வழக்கில் அவர்கள் குறிப்படுகையில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை இரண்டு அண்ணன்களும் விற்று விட்டதாகவும் சில சொத்துக்களை அவர்களது பிள்ளைகளின் பெயருக்கு எழுதி விட்டதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்களான சாந்தி மற்றும் தேன்மொழி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…