சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம்ன்னு பெயர் வந்தது எப்படி தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகராக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தான் அறிமுகமான “பராசக்தி” திரைப்படத்திலேயே மிகச் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றார். அதன் பின் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக பல ஆண்டுகள் கோலோச்சினார்.
சிவாஜி கணேசன் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது அறிஞர் அண்ணாவின் “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியின் வேடத்தில் நடித்ததால் தந்தை பெரியார், கணேசன் என்ற பெயருக்கு முன்னால் சிவாஜி என்ற பெயரை சூட்டினார். அப்போதில் இருந்து அவரது பெயர் சிவாஜி கணேசன் என்றானது.
இந்த நிலையில் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்ற பட்டம் எப்படி வந்தது என்பதை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது சிவாஜி கணேசன் மிகப் புகழ்பெற்ற நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்தில் “பேசும் படம்” என்று ஒரு பத்திரிக்கை இருந்தது.
இதையும் படிங்க: தமிழின் டாப் பாடலாசிரியரை பொது மேடையில் பளார் என அறைந்த பாடகர்… என்ன இருந்தாலும் இப்படியா??
அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த சினிமா பத்திரிக்கையான பேசும் படத்திற்கு பல வாசகர்கள் இருந்தார்கள். அதில் ஒரு வாசகர் சிவாஜியின் அபாரமான நடிப்பை புகழ்ந்து அவரை நடிகர்களுக்கெல்லாம் திலகம் என்று பாராட்டி ஒரு கடிதம் எழுதினார். அவ்வாறுதான் சிவாஜி கணேசனுக்கு நடிகர் திலகம் என்று ஒரு பெயர் வந்ததாம்.