Categories: Cinema News latest news

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!.. திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி

தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரத்பாபு. 1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமான சரத்பாபு கே.பாலசந்தரால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகர். 70, 80களில் முன்னனி  நடிகராக வலம் வந்தார்.

sarath1

சிறந்த குணச்சித்திர நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ரஜினி, கமல் என முன்னனி சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார். வாட்டசாட்டமான உடல், நல்ல நிறம் என திரையுலகமே கண்ணு வைக்கிற அளவுக்கு அழகான நடிகராக வலம் வந்தார் சரத்பாபு.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்புதான் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்பவே அவர் மரணமடைந்து விட்டதாக வதந்திகள் பரவியது.

sarath2

ஆனால் அவர் சகோதரி அது உண்மையில்லை என்று சொன்னார். ஆனால் இன்று சரத்பாபுவின் உடல் நிலையில் சரியான முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதால் தீவிர சிகிச்சைப் பலனின்றி நம்மை விட்டு பிரிந்து சென்றார். அவர் மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Published by
Rohini