திடீரென ஏற்பட்ட விபத்து!.. ஜனகராஜுக்கு ஏற்பட்ட சோகம்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட இயக்குனர்..

janaga raj
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் விரல் விட்டு என்னும் அளவிற்கே உள்ளனர். காட்சிக்குத் தேவையான வசனங்களை மனப்பாடம் செய்து பேசி நடிப்பது ஒரு நடிகனுக்கு எளிதான ஒன்று. ஆனால் அதேப்போல நகைச்சுவை கதாபாத்திரம் அனைவராலும் செய்ய முடியாத ஒன்று. வெகு சிலருக்கு மட்டும் பொருத்தமாக அமையும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சந்திரபாபு,கமல்ஹாசன்,லூஸ் மோகனுக்கு பிறகு சென்னை தமிழை சரளமாக பேசி காமெடியில் அசத்துபவர். கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் பொழுது சினிமாவில் நுழைந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் ஜனகராஜ். ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் விருப்பமான காமெடி நடிகர் ஆனார்.

janaga raj 2
பின் நாட்களில் இருவரது படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தினார். முன்னணி நடிகராக வந்தாலும் இவரது ஆரம்ப கால சினிமா வாழ்க்கை கடுமையாகவே இருந்துள்ளது. இவர் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக பல கம்பெனிகளில் வாய்ப்பு தேடி அலைந்தார். இவர் வீட்டின் அருகாமலேயே இயக்குனர் பாரதிராஜாவின் வீடும் அமைந்திருந்ததால் இருவருக்கும் இடையே நல்லதொரு நட்புணர்வு ஏற்பட்டிருந்தது. பாரதிராஜா இயக்கத்தில் ”வெளிவந்த 16 வயதினிலே” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அவரின் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. பின்னர் ”கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

janaga raj 3
இந்தக் கேள்விப்பட்ட ஜனகராஜ் பாரதிராஜாவிடம் தயங்கி தயங்கி வாய்ப்பினை கேட்கிறார். பாரதிராஜாவிற்கும் இவரை பிடிக்கும் என்பதால் பாக்யராஜிடம் கூறி இவருக்கு ஒரு கேரக்டரை ஏற்பாடு செய்கிறார். அந்த படத்தில் ஒரு வயதான கதாபாத்திரம் கிடைக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஜனகராஜ் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கல் ஒன்று ஜனகராஜ் முகத்தில் பட்டு காயம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முகம் ஒரு பக்கம் முழுவதும் வீங்கிய நிலைக்கு தள்ளப்பட்டார். அதனாலேயே ஜனகராஜின் முகம் ஒரு பக்கம் தூக்கியபடி மாறுபட்ட காணப்படும்.
பின்னர் மின்சாரம் கொண்டு பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்தார். இதனால் இவருடைய போர்ஷன் எடுக்கப்படாமல் தள்ளிப் போகிறது. கிடைத்த வாய்ப்பை தவற விட்டுவிடக்கூடாது என்று பாரதிராஜாவை சந்திக்கிறார் ஜனகராஜ். பாரதிராஜாவும் நடந்ததை அறிந்து கொண்டு அவருக்கான காட்சி எடுக்கப்படுகிறது. பின்னர் மறுநாளில் படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்த இடத்திலேயே தூங்கிக் கொண்டு இருந்தார். இவை கண்ட பாரதிராஜா ”என்னய்யா காலையில் வந்த உடனே தூங்கிட்டு இருக்க .. நடிக்க வந்தியா இல்ல தூங்க வந்தியா.. ”கோபத்துடன் கேட்டார்.

bharathiraja
அதற்கு ஜனகராஜ் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து மாத்திரைகளை எடுத்து காண்பிக்கிறார். பின்னர் கல்லடி பட்டு முகவாதம் வந்ததையும் பின்னர் இதற்காக மின்சாரம் கொண்டு பிசியோதெரபி எடுத்து வருவதாகவும் கண்ணீர் மல்க கூறினார். இதைக் கேட்ட பாரதிராஜா மனம் உருகி ”இனிமேல் நீ செட்டில் தூங்கலாம்..” என்றும் அன்று உதவிய இயக்குனராக பணியாற்றிய மனோபாலாவை அழைத்து அவருக்கு உதவிக்கு இருக்குமாறு செய்துள்ளார். பின்னர் படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது தொடர்ந்து. அங்கிருந்து தமிழ் சினிமாவில் தனது வெற்றி பயணத்தை தொடங்கினார் ஜனகராஜ்.