
Cinema News
சியானுக்கு வில்லனாக ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட் நடிகர்!.. செம மாஸா இருக்கும் போல!..
கமலுக்கு அடுத்தபடியாக தன் உடலை வருத்தி கதைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு நடிப்பவர் சியான் விக்ரம். ஆரம்பக் காலங்களில் பல தடைகளைத் தாண்டி தொலைக்காட்சியில் நடித்து பின்னணி பேசி சிறிய சிறிய படங்களில் நடித்து ”சேது” படத்தின் மூலம் தனக்கான முத்திரையை பதித்தவர் விக்ரம். அதனைத் தொடர்ந்து வந்த அனைத்து கமர்சியல் படங்களும் மாஸ் ஹீரோக்கான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. இவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ”தங்கலான்” என்னும் திரைப்படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

vikram
இயக்குனர் பா.ரஞ்சித் வரலாறுகளை கச்சிதமாக அவரது படங்களில் புகுத்தி நேர்த்தியான படம் எடுப்பதில் வல்லவர் . முக்கியமாக வடசென்னையின் மக்களின் வாழ்வியல் பற்றிய வரலாற்றை இவரது படங்களின் மூலம் பிரதிபலித்திருப்பார். அப்படி தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ”தங்கலான்”. இதில் அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் தங்க சுரங்கத்தில் சுரங்கத்தில் வேலை செய்யும் தமிழர்களை எப்படி கொடுமை செய்தார்கள் என்ற வரலாற்றை கூறும் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

vikram with pa.ranjith
இதில் பார்வதி,பசுபதி,மாளவிகா மோகன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பித்து இப்பொழுது கர்நாடகா பகுதியில் பிரபல திரைப்படமான ”கே.ஜி.எப்” எடுக்கப்பட்ட இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் மேலும் படத்திற்கு வலுக்கூட்டும் விதமாக ஹாலிவுட் நடிகரான ”டேனியல்” இணைந்துள்ளார்.

daniel
அவரது வருகையை போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக பட குழு அறிவித்துள்ளது. இவர் ”தி பியோனிஸ்ட்” என்ற திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றவர். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வெளியான விக்ரமின் ”மகான்” மற்றும் ”கோப்ரா” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுடைய நல்லா வரவேற்பு பெற தவறிவிட்டன. அடுத்து வரவிருக்கும் தங்கலான் படம் விக்ரமிற்கு கம் பேக் ஆக இருக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.