சிலம்பரசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ்த் திரையுலகில் இவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் அவரது இயக்கத்தில் ”காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் 2006 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்டார். ஆரம்பக் காலங்களில் தனது துடிப்பான நடிப்பின் காரணமாக வெற்றி படங்களாக வரிசை கட்டின. நடிப்பு மட்டுமின்றி எழுத்து,இயக்கம்,பின்னணி பாடகர் , இசையமைப்பாளர் என பன்முக திறமையை வளர்த்துக் கொண்டவர்.
ஒரு சில வருடங்களாக இவரது படங்கள் சரிவர வெற்றிகளை தராத நிலை ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெற்றி படங்களுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். கடைசியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ”மாநாடும்” திரைப்படம் மக்களுடைய நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் 2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ”வெண்ணிலா கபடி குழு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம்பெறும் ”பரோட்டா” போட்டியில் கலந்து கொள்வது போல் இருந்த காட்சியில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த காமெடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் இவரை ”பரோட்டா” சூரி என ரசிகர்கள் அழைத்தனர். அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடியனாக நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தார்.
தமிழ் சினிமா பொருத்தவரையில் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்த பின்பு ஹீரோவாக நடிப்பது வழக்கம் தான். அப்படி நடிகர் சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ”விடுதலை” எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்யப்படுகிறார். இப்படத்தில் சூரிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டு வருகிறது. இங்க தான் சிம்புவிற்க்கும் சூரிக்கும் இடையே மோதல் நிலவப்போகிறது.
இந்நிலையில் சிம்பு தனது அடுத்தப் படமான ”பத்து தல” என்னும்படத்தை ரிலீஸ் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியிட பட குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு தலைவலி ஏற்படுத்துவது போல் சூரியின் ”விடுதலை” படமும் அதே தேதியில் வெளிவர உள்ளது. சூரி ”வா மோதி பாக்கலாம் ”என சிம்பு வை அழைப்பது போல் உள்ளது. ஒரே தேதியில் இருவரது படங்களும் வெளியாவது தான் இதற்கு காரணமாக அமைகிறது. இதனால் சிம்பு தனது வெற்றி பார்மை தொடர்வாரா அல்லது சூரி தனது முதல் படத்தில் வகை சூடுவாரா என்று காத்திருந்து பார்ப்போம்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…