1000 கோடி வசூலில் மண்ணள்ளி போட்ட லோகேஷ் கனகராஜ்… கொந்தளித்த பிரபலம்

By Hema
Published on: August 8, 2025
coolie
---Advertisement---

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான் சௌபின் சாஹிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் தற்போது பான் இந்திய அளவில் உருவாகியுள்ளது. இசை அனிருத் அமைத்திருக்கிறார். ரஜினியுடன் இது இவருக்கு 5வது படம். இவர்களது கூட்டணியில் இதுவரை வெளியான அனைத்து ஆல்பமும் மிகப்பெரிய வெற்றியடைந்து படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

அந்த வகையில் கூலி படத்திலும் வெளியான மூன்று பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்கிறது என்றே சொல்லலாம். குறிப்பாக ”மோனிகா” பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரீல்ஸ்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். தற்போது கடைசியாக வெளியாகி உள்ள ”பவர் ஹவுஸ்” பாடல் ரஜினிக்கு மாஸான பாடலாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பாடலாகவும் இருந்தது. படம் வருகிற 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியான ஒரு சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் வீவ்ஸ்களை பெற்று ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது.

பொதுவாக ஒரு ட்ரெய்லரை பொறுத்தவரை அதனை பார்த்தாலே படத்தின் கதையை கணித்து விடலாம். ஆனால் கூலி ட்ரைலரை யாரும் டி-கோர்ட் செய்ய முடியாத அளவுக்கு கட் செய்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சமீபத்தில் கூட அனிருத் பேசிய நேர்காணல் ஒன்றில் கூலி ஒரு இன்டலிஜென்ட் படம் என்று சொல்லியிருந்தார். அதேபோல‌ ட்ரைலரும் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படங்களில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருந்தாலும் அவர்களுக்கான ஈக்குவல் ஸ்பேசை ரைட்டிங்கில் கொடுத்திருப்பார்.

படத்தில் கொஞ்ச நேரம் வரும் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதன் வீரியம் ஒரு படம் முழுதும் நடித்தது போல இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வடிவமைப்பது லோகேஷுக்கு கைவந்த கலை. கூலி படத்திலும் அது தொடர்ந்து இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஆயிரம் கோடி வசூல் சாதனையை இந்த படம் பெரும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை இந்நிலையில் கூலி படத்தை குடும்பமாக பார்க்க முடியாமல் செய்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் என்று கொந்தளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகர்மான செய்யாறு பாலு . மேலும் அவர் கூறியதாவது

“கூலி படத்திற்கு ‘A’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் 18 வயது கீழ் உள்ளவர்கள் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க பட மாட்டார்கள். அதனால் இந்த படத்திற்கு டிக்கெட் புக் செய்தவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றால் தியேட்டர் நிர்வாகிகள் அவர்களை அனுமதிக்க மாட்டார்கள். இப்பொழுது இதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. காலா, கபாலி, ஜெய்லர் படம் எல்லாம் எவ்வளவு வன்முறையாக இருந்தது. அந்தப் படத்திற்கே ‘U’ , ‘U\A’ கிடைத்தாலும் இந்த படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனால் குடும்பமாக வரக்கூடிய ரசிகர்கள் குறையக்கூடும் அப்படி குறையும் பட்சத்தில் வசூல் குறையும் தமிழ் சினிமாவில் சமீபத்திய இந்த திரைப்படங்கள் எதுவும் பெரிதாக வசூல் வேட்டை நடத்தியதில்லை. கூலி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, இப்போ அதில் மண் அள்ளி போட்டது போல் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் நினைத்திருந்தால் இந்த படத்திற்கு காம்பரமைஸ் செய்து அதிக வன்முறை காட்சிகளை நீக்கி இருக்கலாம். இதனால் ‘U’ அல்லது ‘U\A’ சான்றிதழ் கிடைத்திருக்கும். ஆனால் அவர் எந்தவித காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தயாராக இல்லை. என்று சொல்லிவிட்டார்.

இதனால் சோசியல் மீடியா முழுவதும் லோகேஷ் மீது மிகுந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர் விஜய் உடைய ஆளு ரஜினிக்கு எதிரா இப்படி பண்ணி இருக்காரு. ஆயிரம் கோடி வசூல் அடிக்க கூடாது என்று வேண்டுமென்றே செய்கிறார். என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை அடிக்கி வருகின்றனர். குறிப்பாக ரஜினி ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு தான் இதை செய்திருக்கிறார் என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Hema

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.