கங்குவா திரைப்படத்தின் குறைகள் அனைத்தையும் சரி செய்து வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2 வருடங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல் மற்றும் திஷா பதாணி உள்ளிட ஏராளமான நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
இதையும் படிங்க: தனுஷ் இறங்கி வந்தும் கெத்து விடாத நயன்தாரா! பிரச்சினையின் ஆரம்பப்புள்ளியே இதுதானாம்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வந்தது. பேன் இந்தியா திரைப்படமாக 10 மொழிகளில் உலக அளவில் இப்படம் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து படம் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் தான். படம் மிகுந்த இரைச்சலாக இருக்கின்றது.
சூர்யாவின் கடந்த இரண்டு வருட உழைப்பு வீணாகிவிட்டது. சிறுத்தை சிவா சூர்யாவை வச்சு செய்து விட்டார் என்றெல்லாம் நெகட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் வலம் வந்தது. சூர்யாவின் சினிமா வாழ்க்கையிலேயே மிக மோசமான விமர்சனத்தை சந்தித்து திரைப்படம் கங்குவா தான். அதற்கு முக்கிய காரணம் படக்குழுவினர் தான்.
தொடர்ந்து ப்ரோமோஷன் என்கின்ற பெயரில் படம் குறித்து மேடைக்கு மேடை ஆகா ஓகோ என்று பேசி ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் ராஜா தான். அந்த எதிர்பார்ப்பை கங்குவா படம் பூர்த்தி செய்யவில்லை என்பதால் தங்களது ஆதகங்களை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று நடிகை ஜோதிகா இப்படம் குறித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் திட்டமிட்டு கங்குவா திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை கூறி வருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். மேலும் மூன்று மணி நேரம் படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டும்தான் சரி இல்லை. அதற்காக மொத்த படமே சரி இல்லை என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.
இப்படத்தில் இருந்த கேமரா வேலைப்பாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருந்தது. படத்தில் பல நல்ல விஷயங்கள் இருக்கும்போது நெகட்டிவ் விஷயங்களை மட்டும் ஏன் கூறி வருகிறீர்கள் என்று காட்டமாக பதிவிட்டு இருந்தார். எது எப்படியோ படம் மோசமான விமர்சனத்தை பெற்று விட்டது. இதிலிருந்து மீளுவதற்கு தற்போது படக்குழுவினர் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி படத்தில் முதல் 40 நிமிட படம் மோசமாக இருப்பதாக கூறி வந்தார்கள். முதலில் அதிலிருந்து 20 நிமிடத்தை குறைப்பதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சத்தம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்ததால் அதனை திரையரங்குகளில் குறைத்தால் மட்டும் சரி வராது என்பதால் அதன் டிராக்டில் சரி செய்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: சிரிச்சே கவுத்துப்புட்டீயே சின்ராசு.. ‘கங்குவா’ படத்தில் சிறுத்தை சிவா பண்ண வேலையை பாருங்க
இவை அனைத்தும் முடிந்து இன்று மாலை அல்லது நாளை காலை முதல் இப்படம் மீண்டும் வெளியிடப்படும் என்று கூறிப்படுகிறது. இருப்பினும் இந்த திரைப்படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் உலகத்தின் மூளை முடுக்கெல்லாம் சென்றிருக்கும் காரணத்தால் என்னதான் பட்டி டிங்கரிங் பார்த்தாலும் படம் மீண்டு எழுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
Kanguva: அதிக…
16வயதினிலே படத்திற்குப்…
பிரதீப் ரங்கநாதன்…
Nayanthara: தனுஷ்…