Cinema News
சீனாவில் கிடைத்த அமோக வரவேற்பு!.. பலே பிளான் போட்ட மகாராஜா படக்குழு..
மகாராஜா திரைப்படம் சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அப்படத்தை ஜப்பானில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். இடையில் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஜவான் திரைப்படத்திற்கு பிறகு இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதையும் படிங்க: பாகுபலியில் கட்டப்பா வேஷம்!.. பெருசா திருப்தி இல்ல!.. வேறலெவல் சத்தியராஜ்!…
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக மகாராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார். விஜய் சேதுபதியின் 50-வது படமான மகாராஜா திரைப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வெளியானது முதலே ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து ஒரு த்ரில்லர் ஜானலில் இப்படத்தை இயக்கியிருந்தார் நிதிலன். இந்த திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனால் படக்குழுவினர் இந்த திரைப்படத்தை சீனாவில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருந்தார்கள். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சீன ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்ததால் படம் வெளியான இரண்டு நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எந்த இந்திய திரைப்படமும் சீனாவில் இந்த அளவிற்கு வரவேற்பை பெறாத நிலையில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் 4.2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மகாராஜா திரைப்படம் சீன ரசிகர்களிடையே சிறந்த விமர்சனத்தையும் பெற்று இருக்கின்றது. அதிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் மேலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: அங்க இங்க கைய வச்சு… கடைசியில் கமல்ஹாசனின் அடி மடியில் கை வைத்த அமரன் திரைப்படம்!..
சீனாவில் இருக்கும் மக்கள் மகாராஜா திரைப்படத்திற்கு கொடுத்த வரவேற்பை பார்த்த பட குழுவினர் இந்த திரைப்படத்தை ஜப்பானில் வெளியிடுவதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். ஜப்பானிலும் அதிக தமிழ் ரசிகர்கள் இருப்பதால் அங்கு இப்படத்தை கொண்டு செல்வதற்கு பட குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கள். விரைவில் அங்கும் மகாராஜா திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.