Cinema History
கொஞ்ச நாள் ஊருக்குள்ள இருக்காதீங்க! – ரம்யா கிருஷ்ணனை எச்சரித்த படக்குழு..
தனது தனிப்பட்ட நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழில் பல முன்னணி கதாநாயகர்களோடு நடித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன். ரம்யா கிருஷ்ணன் என்பதையும் விட அவரை நீலாம்பரி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.
அந்த அளவிற்கு படையப்பாவில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் மிக பிரபலமான கதாபாத்திரமாக இருந்தது. ஆனால் அவர் செளந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் நடிக்க ஆசைப்பட்டார். இருந்தாலும் கே.எஸ் ரவிக்குமார் நீலாம்பரி கதாபாத்திரம் கண்டிப்பாக ரம்யா கிருஷ்ணனுக்கு சிறப்பாக இருக்கும் என நம்பினார்.
நீலாம்பரி கதாபாத்திரமானது ரஜினிக்கு எதிரான ஒரு பலமான கதாபாத்திரமாகும். படம் முழுக்க தாங்க முடியாத தொல்லைகளை படையாப்பாவிற்கு கொடுத்து வருவார் நீலாம்பரி. எனவே படப்பிடிப்பு முடியும் தருவாயில் ரம்யா கிருஷ்ணனை பார்த்த படக்குழுவினர் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
ஊரை விட்டு கிளம்பிய ரம்யா கிருஷ்ணன்:
படத்தில் நீங்கள் பெரிய வில்லியாக நடித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உங்கள் மீது கோபப்பட வாய்ப்புள்ளது. எனவே படம் வெளியாகும்போது நீங்கள் ஊருக்குள் இருக்க வேண்டாம் என கூறியுள்ளனர். ரம்யா கிருஷ்ணனும் படையப்பா வெளியானபோது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு எதிர்பார்த்ததை போலவே படம் வெளியானபோது ரசிகர்கள் பலர் திரையரங்கில் திரைகளை கிழித்தனர் என்கிற செய்தி ரம்யா கிருஷ்ணனுக்கு கிடைத்தது.