சினிமா துறையிலேயே மிகவும் பொறுப்பான ஒரு துறையாக இருப்பது படத்தின் இயக்கம்தான். ஒரு படத்தை இயக்குவதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றியே அமைகிறது. அதில் நடிக்கும் ஹீரோக்கள் எல்லாம் அடுத்தப்பட்சம்தான். உலகம் முழுவதும் படங்களின் வெற்றிக்கு காரணமாக அதன் இயக்குனர்களே இருந்து வருகின்றனர்.
அதே போல படத்தை இயக்குவதும் கடினமான காரியமாகும். அனைவராலும் இயக்குனராகிவிட முடியாது. அதனால்தான் நடிகர்கள் கூட அதிகப்பட்சம் இயக்குனராக மாட்டார்கள். ஆனால் அப்போதே நடிகர் ஒருவர் இயக்குனராக மாறி ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.
அது வேறு யாரும் அல்ல மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். எம்.ஜி.ஆருக்கு வெகு நாளாக திரைப்படம் எடுக்க ஆசை இருந்தது. எனவே பெரும் பட்ஜெட்டில் எம்.ஜி.ஆர் எடுத்த திரைப்படம்தான் உலகம் சுற்றும் வாலிபன். உலகம் முழுக்க பல நாடுகளுக்கு சுற்றி இந்த படத்தை எடுத்தார் எம்.ஜி.ஆர்.
ஆனா வழக்கமாக எடுப்பதை விடவும் அதிக காட்சிகளை அவர் எடுத்துவிட்டார். பிறகு அவற்றை படத்தின் எடிட்டரிடம் கொடுத்துள்ளார். அதை பார்த்து அரண்டு போயுள்ளார் எடிட்டர். இவ்வளவு ரீல்களையும் வெட்டி ஒட்டி 3 மணி நேரத்திற்குள்ளாக படமாக்க வேண்டும் என்பது கடினமான காரியமாக இருந்தது.
ஆனாலும் எடிட்டர் அதை சுருக்கி படமாக்கினார். பிறகு அந்த படத்தை ரிலீஸ்க்கு முன்பே பார்த்த நம்பியார் படத்தை இன்னும் சுருக்க வேண்டும் என்றார். பிறகு மீண்டும் எடிட் செய்த பிறகுதான் அந்த படம் திரையில் வெளியானது.
இதையும் படிங்க: பாதி படம் முடிந்தபோது ஏற்பட்ட விபத்து.. ஆனாலும் தயாரிப்பாளரை காப்பாற்றிய எம்.ஜி.ஆர்..
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…
TRP Tamil:…
தமிழ்நாடு திரையரங்கு…
Dhanush SK: …