சினிமா துறையை பொறுத்தவரை யாருக்கு என்ன திறமை இருக்கிறதென்று உடனே தெரியாது. ஆனால் அது வெளியில் தெரியும்போது அவர்கள் பெரும் உச்சத்தை அடைவார்கள். அதற்கு சினிமாவில் ஒரு வாய்ப்பு அமைய வேண்டும்.
ரஜினி கமல் போட்டி சினிமாவில் இருந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான இயக்குனராக பார்க்கப்பட்டவர் இயக்குனர் பாலச்சந்தர். பல இயக்குனர்கள் படம் எடுத்த பின்னர் பாலச்சந்தரை தனியாக அழைத்து படத்தை போட்டு காட்டுவார்கள். அதை பார்த்துவிட்டு பாலச்சந்தர் படத்தில் என்ன மாற்ற வேண்டும் என கூறுவார்.
ஏனெனில் அப்போது பாலச்சந்தர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ஹிட் கொடுத்து வந்தன. இந்த நிலையில் 1988 ஆம் ஆண்டு இயக்குனரும் நடிகருமான விசு பெண்மணி அவள் கண்மணி என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தில் ரேடியோ மாமா என்கிற கதாபாத்திரத்தில் விசுவும் நடித்திருந்தார்.
அந்த படத்தை பார்த்த பாலச்சந்தர் இந்த படம் நன்றாகவே இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனால் மிகுந்த வருத்தத்திற்கு சென்றுவிட்டார் விசு. ஏனெனில் பாலச்சந்தர் ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று கூறினால் அது ஓடுவது கஷ்டம்.
இந்த நிலையில் விசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த கஸ்தூரி ராஜாவும் அந்த படத்தை பார்த்திருந்தார். அந்த படத்தில் ஏதோ ஒரு தவறு உள்ளது அதை சரி செய்தால் படம் நன்றாக இருக்கும் என கஸ்தூரி ராஜா நினைத்தார்.
எனவே பாலச்சந்தரிடம் அவகாசம் கேட்டு மொத்த படத்தையும் ரீ எடிட்டிங் செய்தார் கஸ்தூரி ராஜா. பிறகு மீண்டும் பாலச்சந்தரை அழைத்து படத்தை போட்டு காட்டினர். அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிறகு நல்ல வெற்றியை கொடுத்த அந்த படம் வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சண்டைக் காட்சியில் விஜய்க்கு நடந்த விபத்து… கடுமையாக திட்டிய எஸ்.ஏ.சி… ஏன் தெரியுமா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…