ஜெயலலிதா படத்தில் ஓவர்டோஸ் கவர்ச்சி!.. அரசியலுக்கு போனதுக்கும் அதுதான் காரணமாம்!..

by Rajkumar |   ( Updated:2023-06-05 09:56:10  )
ஜெயலலிதா படத்தில் ஓவர்டோஸ் கவர்ச்சி!.. அரசியலுக்கு போனதுக்கும் அதுதான் காரணமாம்!..
X

சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பிரபலமானவர் என்றால் அது நடிகை ஜெயலலிதா. தமிழில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா.

அதற்கு பிறகு எம்.ஜி.ஆருடன் சேர்ந்து இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடி என்பதே தமிழ் சினிமாவில் ஒரு காம்போவாக மாறியது.

எம்.ஜி.ஆர் மூலமாகதான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். ஆனால் அவர் அரசியலுக்கு வருவதற்கு காரணமாக ஒரு படம் இருந்தது என கூறுகிறார் டாக்டர் காந்தராஜ். ஜெயலலிதா 1970களின் இறுதியில் படம் தயாரிக்கலாம் என ஆசைப்பட்டார்.

ஜெயலலிதா தயாரித்த படம்:

எனவே நதியை தேடி வந்த கடல் என்னும் படத்தை ஜெயலலிதாவே தயாரித்தார். அந்த படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தார். அப்போது எம்.ஜி.ஆர் நடிப்பில் இருந்து விலகி இருந்ததால் ஜெயலலிதாவிற்கு ஜோடியாக சரத்பாபு நடித்தார்.

இந்த படத்தில் அதிக கவர்ச்சி காட்சிகளை வைத்தார் ஜெயலலிதா. அதன் மூலம் படத்தை வெற்றியடைய செய்யலாம் என நினைத்தார். ஆனால் சென்சாருக்கு படம் சென்றபோது அங்கு படத்தின் அனைத்து கவர்ச்சி காட்சிகளையும் நீக்கி விட்டனர்.

அதற்கு பிறகு வெளியான படமும் பெரிதாக வெற்றியடையவில்லை. இந்த படத்திற்காக ஜெயலலிதா அவர் வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்திருந்தார். இந்த நிலையில் வேறு வழி இல்லை என்றுதான் அவர் அரசியலுக்கு வந்தார் என கூறுகிறார் டாக்டர் காந்தராஜ்.

இதையும் படிங்க: உதவி இயக்குனரின் சட்டையை பிடித்து இழுத்த எம்.ஜி.ஆர்! பின்னாளில் வெற்றி இயக்குனராக வலம் வந்த நபர்…

Next Story