ரஜினிக்காக தயாரான கதை!.. இயக்குனரை கொத்திக் கொண்டுபோன விஜயகாந்த்.. நடந்தது இதுதான்..
1990 களில் விஜயகாந்தை வைத்து வரிசையாக ஹிட் படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் லியாகத் அலி. ஏழை சாதி, கட்டளை, சக்கரை தேவன் போன்ற திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார்.
1985 காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தேடி வந்தார் லியாகத் அலி. அந்த சமயத்தில் அவரிடம் ஒரு திரைப்படத்திற்கான திரைக்கதை இருந்தது. ஒரு திரைக்கதை பிடித்திருந்தால் சில தயாரிப்பாளர்கள் அதற்கான தொகையை கொடுத்து வாங்கி கொள்வதுண்டு.
லியாகத் வைத்திருந்த கதை ஒரு கமர்ஷியல் திரைப்படமாக எடுப்பதற்கு உகந்த கதையாகும். இந்த கதை குறித்த தகவல் எப்படியோ ஏ.வி.எம் நிறுவனத்திற்கு சென்றுவிட்டது. அவர்கள் லியாகத் அலியை அழைத்திருந்தனர்.
ஏ.வி.எம் சரவணன், எஸ்.பி முத்துராமன் ஆகியோர் முன்னிலையில் லியாகத் அலி திரைக்கதையை கூறினார். கேட்டவுடனே அந்த கதை ஏ.வி.எம் சரவணனுக்கு பிடித்துவிட்டது. அதை ரஜினியை வைத்து படமாக்கலாம் என அவர் முடிவு செய்தார். அந்த கதைக்காக லியாகத் அலிக்கு 25,000 ரூபாய் தருவதாக பேசப்பட்டது.
அப்போது லியாகத் அலி விஜயகாந்திற்கு நண்பராக இருந்தார். எனவே நடந்த விஷயத்தை விஜயகாந்திடம் கூறினார் லியாகத். அதை கேட்டதும் அப்போதுதான் படத்தின் கதையை கேட்டார் விஜயகாந்த். விஜயகாந்திற்கும் அந்த கதை மிகவும் பிடித்துப்போனது. உடனே விஜயகாந்த் “அந்த படத்தில் நான் நடிக்கிறேன். நீங்கள் இயக்குங்கள்” என கூறிவிட்டார்.
எனவே ஏ.வி.எம் சரவணனிடம் தானே அந்த படத்தை இயக்க போவதாக கூறி கதையை வாங்கி வந்துவிட்டார் லியாகத் அலி. ஆனால், பூந்தோட்ட காவல்காரன் படத்தில் வசனம் எழுதும் வேலையை கொடுத்தார் விஜயகாந்த். அவரை இயக்குனராக்கவில்லை. அதன்பின் சில வருடங்கள் கழித்து ஏழைஜாதி, எங்க முதலாளி, சர்க்கரை தேவன் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை லியாகத் அலிகானுக்கு கொடுத்தார் விஜயகாந்த்.