இந்த படத்தை யாரும் வாங்க மாட்டோம்!.. கை விரித்த விநியோகஸ்தர்கள்.. தக்க சமயத்தில் கமல் செய்த காரியம்!.
தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே பெரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன். சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கதாநாயகர்கள் மட்டுமே மார்க்கெட்டில் இருக்க முடியும் என்கிற நிலை உண்டு. ஆனால் பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்துவிட்டு பிறகு திரைப்படத்தில் வந்து நடித்தாலும் கூட தனது மார்க்கெட்டை இழக்காமல் இருப்பவர் நடிகர் கமல்ஹாசன்.
அதற்கு சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படமே ஒரு உதாரணமாகும். சினிமாவிற்கு வந்ததிலிருந்து நடிகர் கமல்ஹாசனுக்கு தொடர்ந்து மாற்று சினிமாவை தமிழ் சினிமாவிற்குள் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது.
அதற்காக அவரே சொந்த தயாரிப்பில் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் சில படங்கள் கமல் நடிப்பில் பிரபலமாகியுள்ளன. இதனால் தமிழில் வரும் வேறு மாற்று சினிமா படங்களுக்கும் கமல்ஹாசன் ஆதரவு அளித்து வந்தார்.
கமல் எடுத்த படம்:
அப்படி 1994 ஆம் ஆண்டு கமல் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் மகளிர் மட்டும். அப்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களைக் கொண்டே திரைப்படங்கள் அதிகமாக வந்து கொண்டிருந்தன.
அப்பொழுது பெண்களை முன்னிலைப்படுத்தி கதாநாயகனே இல்லாமல் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்கிற ரீதியில் கமல்ஹாசன் தயாரித்த திரைப்படம் மகளிர் மட்டும்.மகளிர் மட்டும் திரைப்படம் தயாரான பிறகு அதை வாங்குவதற்கு எந்த விநியோகஸ்தர்களும் தயாராக இல்லை. பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் அவ்வளவாக ஓடாது என்று விநியோகஸ்தர்கள் நினைத்தனர்.
இதனால் படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ் மிகுந்த கவலையடைந்தார். ஆனால் கமலே அந்த படத்தை நேரடியாக வெளியிட்டார் அதனால் வரும் இழப்புகளை நானே சந்தித்துக் கொள்கிறேன் என்று வெளியிட்டார் ஆனாலும் படம் ஒரு வெற்றி படமாகவே அமைந்தது.
இதையும் படிங்க: இப்படி எழுதினா நான் பாட மாட்டேன்!.. கண்ணதாசனிடம் மல்லுக்கட்டிய டி.எம்.எஸ்..