Kanguva: அடக்கொடுமையே... அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!...

by ramya suresh |   ( Updated:2024-11-15 07:19:15  )
Kanguva: அடக்கொடுமையே... அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!...
X

#image_title

கங்குவா திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நவம்பர் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: தம்பிக்கு ஒரு நியாயம்? அண்ணனுக்கு ஒரு நியாயமா? சூர்யாவை மட்டும் இப்படி கவுத்திப்புட்டீங்களே..!

மேலும் பாபி தியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுக்கப்பட்டு நேற்று திரையரங்குக்கு வந்தது கங்குவா. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த திரைப்படம் சுமார் 11, 500 ஸ்கிரீன்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

படத்தின் ப்ரோமோஷனில் படக்குழு பேசியதை கேட்டு இப்படத்தின் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் நாள் செல்ல செல்ல படக்குழு கொடுத்த பில்டப் மிக அதிகமாக இருந்தது. இருப்பினும் தெலுங்குக்கு பாகுபலி போல் தமிழ்நாட்டுக்கு கங்குவா என்றெல்லாம் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்கள். அந்த நம்பிக்கையில் ஒரு லாரி மண்ணை அள்ளி கொட்டிவிட்டார் இயக்குனர் சிறுத்தை சிவா.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. ஆனால் ஆந்திரா, தெலுங்கு மற்றும் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு சென்று ரசிகர்கள் படம் பார்த்தார்கள். ஆனால் படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. படம் முழுக்க வெறும் இரைச்சலாகவே இருந்தது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எரிச்சல் அடைந்தார்கள்.

Kanguva

படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சனங்கள் வரை கங்குவா படத்தினை பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். படத்தின் கதை ஸ்ட்ராங்காக இல்லை. இசையில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்பது தான் பலரின் கருத்து. இந்நிலையில் படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது என்பது தொடர்பான தகவல் காலையிலேயே வெளியானது.

அதன்படி இந்தியா முழுவதும் ரூபாய் 22 கோடி பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது தமிழகத்தில் மட்டும் கங்குவா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க:ரசிகர்கள் தலைவலியோட போகலாமா?!… என்னப்பா ஆஸ்கார் நாயகனே இப்படி சொல்லிட்டாரு!..

அதன்படி தமிழகத்தில் கங்குவா திரைப்படம் 8.3 கோடி தான் வசூல் செய்துள்ளதாம். இது அமரன் திரைப்படத்தின் முதல் நாள் வசூலை விட மிக குறைவு என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறி வருகிறார்கள். அமரன் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில் அதில் பாதியைக் கூட சூர்யாவின் கங்குவா திரைப்படம் வசூல் செய்யவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

Next Story