தமிழ்நாட்டில் உள்ள இசையமைப்பாளர்களிலேயே முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழின் பெருமையை உலகறிய செய்தவர் என இவரை கூறலாம். ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாகும் பாடல்கள் என்றாலே அவை மாஸ் ஹிட் கொடுத்துவிடும். அவரது முதல் படத்தில் துவங்கி இப்போது வந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை அது மாறவே இல்லை.
தமிழ் சினிமாவிற்கு புது விதமான இசையை அறிமுகப்படுத்தியவர் ஏ.ஆர் ரகுமான். அதுவே அவரது இசை பிரபலாமவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இசையமைப்பாளராக ஆவதற்கு முன்பு ஏ.ஆர் ரகுமான் இளையராஜாவிடம்தான் பணிப்புரிந்து வந்தார். அப்போதுதான் இளையராஜா தமிழ் சினிமாவில் கணினி வழி டிஜிட்டல் இசையை அறிமுகப்படுத்த நினைத்தார்.
புன்னகை மன்னன் திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் அந்த படத்திற்கு இசையமைப்பதற்காக கணினியை வாங்கினார் இளையராஜா. ஆனால் அதில் எப்படி இசையமைக்க வேண்டும் என்கிற விஷயம் இளையராஜாவிற்கு தெரியவில்லை. ஆனால் ஏ.ஆர் ரகுமானுக்கு அதில் இசையமைக்க தெரியும்.
எனவே ஏ.ஆர் ரகுமானை அழைத்த இளையராஜா புன்னகை மன்னன் திரைப்படத்தில் பிரபலமாக வரும் தீம் மியூசிக்கை எழுதி கொடுத்து அதை கணினியில் வாசிக்க சொன்னார். ஏ.ஆர் ரகுமானும் அப்படியே அதை கணினியில் வாசித்தார். அந்த பாட்டு சிறப்பாக வந்தது.
தமிழில் முதன் முதலாக கணினி வழி வந்த இசை அந்த பாட்டுதான். அதை இசைத்தது ஏ.ஆர் ரகுமான்தான். இந்த நினைவுகளை அப்படியே பாதுக்காப்பதற்காக அந்த கணினியை இன்னமும் வைத்துள்ளாராம் ஏ.ஆர் ரகுமான்.
இதையும் படிங்க: நாங்க ரஜினி ஆஃபிஸ்ல இருந்து பேசுறோம்- கலாய்ப்பதாக நினைத்து ஃபோனை கீழே வைக்க சொன்ன சுந்தர் சி… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்டு…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…