நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் வேடம்... பேசிய முதல் வசனம்... வெளிவராத தகவல்கள்!..

எம்.ஜி.ஆரின் அப்பா மருதூர் கோபாலகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். பணிமாறுதலுக்காக அவரின் குடும்பம் இலங்கை சென்றது. அங்கே கண்டி மாவட்டத்தில் பிறந்தவர்தான் எம்.ஜி.ஆர். அப்பாவின் மறைவுக்கு பின் எம்.ஜி.ஆரின் அம்மா சத்யா தனது இரண்டு குழந்தைகளுடன் கும்பகோணத்தில் வந்து தங்கினார். குடும்பத்தில் வறுமை வாட்டியது. அப்போது நாடக கொட்டைகள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் செயல்பட்டு வந்தது.
நாடகத்திற்கு அனுப்பினால் பிள்ளைகளுக்கு மூன்று வேளை உணவும், உடையும் கிடைக்கும் என நினைத்து எம்.ஜி.ஆர் மற்றும் சக்கரபாணி இருவரையும் அனுப்பி வைத்தார் சத்யா. இப்படித்தான் எம்.ஜி.ஆரின் நடிப்பு வாழ்க்கை துவங்கியது. கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு தனது 37 வயதில்தான் சினிமாவில் நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார்.
இவரின் படங்களில் இடம் பெற்ற வாள் சண்டை மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். சரித்திர படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். 20 வருடங்களும் மேல் தமிழ் சினிமாவின் ஆளுமையாக வலம் வந்தார். அரசியலிலும் இறங்கி தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை பதவியேற்றார்.
இந்நிலையில், நாடகத்தில் எம்.ஜி.ஆர் சேர்ந்தபோது அவர் முதன் முதலாக நடித்த நாடகம் மற்றும் பேசிய வசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.
எம்.ஜி.ஆர் 1924ம் வருடம் அவது ஏழாவது வயதில் நடித்த முதல் நாடகம் மகா பாரதம். அந்த நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு விராட நாட்டின் உத்தரன் வேடம் கொடுத்தார்கள். அதுதான் அவர் ஏற்ற முதல் கதாபாத்திரம். அர்ச்சுனன் வில் வித்தை பயிற்சியில் ஈடுபடும்போது அவருக்கு அம்புகளை எடுத்து கொடுக்கும் வேடத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார். ‘ஐயோ பாம்பு ஐயோ பாம்பு’ என கத்தும் வசனம்தான் எம்.ஜி.ஆர் பேசிய முதல் வசனம் ஆகும். அப்படி நடிக்கும்போது செருப்பை மாற்றி போட்டுவிட்டு ஓடும்போது அர்ச்சுனனனாக நடிப்பவர் மீது மோதி கீழே விழுந்துவிட்டாராம். முதல் நாடகத்தில் நடித்தபோதே நாம் நன்றாக நடித்து பேரும், புகழும் பெற வேண்டும் என்கிற எண்ணமும், வெறியும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. அதுதான் அவரை நாடகம், சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் வெற்றிபெற வைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கடைசி காலத்தில் நேரில் வரவழைத்து அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர்!.. நெகிழ்ந்து போன கமல்ஹாசன்!..