முதல்ல மத்தவங்களை மதிக்க கத்துக்கோ.. அப்புறம் நீ டைரக்ட் பண்ணு!.. ஷங்கரை திட்டும் பிரபலம்!..

by sankaran v |   ( Updated:2024-05-05 02:53:36  )
Director Shankar
X

Director Shankar

செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, இந்திரலோகத்தில் நா.அழகப்பன், முன் தினம் பார்த்தேனே, வேட்டையாடு விளையாடு, வித்தகன் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது வேட்டையாடு விளையாடு.

கமல் நடிப்பில் அதிரடி காட்டிய படம் வேட்டையாடு விளையாடு. கௌதம் மேனன் இயக்கத்தில் 2006ல் இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். எதையும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசக்கூடியவர் இவர். இவர் இந்தப் படத்தின் போது நடந்த சில சுவையான அனுபவங்களை படத் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.

Kamal, MN

Kamal, MN

வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஆடியோ லாஞ்ச்சுக்குத் தயாராகிறது. அப்போ கௌதம் மணிரத்னம் சாரையும், ஷங்கரையும் கூப்பிடுகிறார். மணி சார்ட்ட நான் பேசறது இல்ல. ஷங்கர் கிட்ட வேணா நான் பேசறேன்னு சொல்லிட்டு ஷங்கர் ஆளுக்கிட்ட போன் பண்ணி அப்பாயின்மெண்ட் வாங்கறேன். ஏவிஎம்ல சிவாஜி பட சூட்டிங் நடக்குது. அப்பாயின்மென்ட் தந்த நேரத்துல அங்கு போறேன். சூட்டிங்கில பார்க்கப் போன உடனே ஷங்கர் செட்ல இருந்து வெளியே போறாரு.

"நீ பெரிய ஆளா இரு. உன்னை மதிச்சி நான் வந்துருக்கேன். எனக்கும் ரெண்டு கை தான். ஷங்கருக்கும் ரெண்டு கை தான். முதல்ல மனுஷன மனுஷன் மதிக்கக் கத்துக்கோங்க. அப்புறம் படம் பண்ணுங்க. நக்கலா பண்றான் அந்த ஆளு.

இதையும் படிங்க... நடிகைக்கு தெரியாமல் திடீர் முத்தம் கொடுத்த ஆடுகளம் நரேன்… அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!

ஒரு அப்பாயின்மென்ட் கொடுத்தா ஹானர் பண்ணனும். ஒரு மனுஷன் வரான். அவன் பிச்சைக்காரனா இருக்கட்டும். அவன் கூலியா இருக்கட்டும். எவனோ அவனை மனுஷனா மதிக்கணும். அப்புறம் சாரின்னாரு. நீ போன் பண்ணி ஷங்கர் சார் கூப்பிட்டா நான் வரேன். இல்லேன்னா அவரும் வர வேண்டாம்" னு சொல்லிட்டேன்.

Next Story