கோலிவுட்டே படையெடுக்கும் ராமோஜிவ் பிலிம் சிட்டி!.. அதில் சூட் பண்ண முதல் தமிழ் படம் எதுனு தெரியுமா?..

by Rohini |
movie
X

movie

இன்று தமிழ் சினிமாவே படையெடுக்கும் ஒரு இடமாக ஐதராபாத்தில் இருக்கும் பிலிம் சிட்டி திகழ்கிறது. முன்னனி நடிகர்கள் எல்லாம் தங்களது படப்பிடிப்பை அந்த பிலிம் சிட்டியில் நடத்துவதை தான் விரும்புகிறார்கள். துணிவு, ஜெய்லர், வாரிசு போன்ற பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் அங்கு தான் சூட் செய்யப்படுகின்றன.

movie1

simran

இதனால் தமிழக கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றன என்று பல தயாரிப்பாளர்கள் அதனை எதிர்த்து மேடைகளில் பேசியும் வருகின்றனர். உச்சக்கட்டமாக தயாரிப்பாளர் கே.ராஜன் இப்படி தெலுங்குகாரர்களுக்கு வேலையை கொடுக்கும் முன்னனி நடிகர்கள் தமிழ் நாட்டு ஊழியர்களை நடுத்தெருவில் விட்டு விடுகிறார்களே என்று பலமுறை சாடியும் வருகின்றார்.

இதையும் படிங்க : ஒரு சூப்பர் ஸ்டாரை இப்படி திட்டிட்டோமே.. “என்ன இருந்தாலும் அப்படி பண்ணிருக்க கூடாது”… ஃபீலிங்ஸ் ஆன பாலச்சந்தர்…

ஆனாலும் இன்று வரை ஐதராபாத்தை நோக்கியே கோலிவுட் படையெடுத்து வருகின்றனர். இந்த அளவுக்கு பிரபலமடைந்த ராமோஜிவ் பிலிம் சிட்டியில் முதன் முதலில் படப்பிடிப்பை நடத்திய தமிழ் படம் இயக்குனர் நந்தகுமார் எடுத்த ‘கோடீஸ்வரன்’ திரைப்படம் ஆகும். இவர் விஜயகாந்தை வைத்து தென்னவன் என்ற படத்தை இயக்கியவர் ஆவார்.

movie2

nandhakumar kunjumon

குஞ்சுமோன் தயாரிப்பில் தயாரிக்கப்பட்ட கோடீஸ்வரன் திரைப்படத்தில் குஞ்சுமோன் மகன் தான் ஹீரோவாம். ஹீரோயின் சிம்ரன். மேலும் பல உச்ச நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த படம் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பாகவே வெளிவரக்கூடிய திரைப்படமாகும். ஆனாலும் இன்று வரை அந்த படம் வெளியாகவில்லை.

தயாரிப்பில் ஏற்பட்ட பணப்பிரச்சினை காரணமாகவே படம் வெளிவரவில்லையாம். இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஹிந்தி நடிகை கரீஷ்மா கபூர் ஆடியிருப்பாராம். இந்த பாடல் காட்சியை தான் ராமோஜிவ் பிலிம் சிட்டியில் எடுத்தனராம். இந்த படப்பிடிப்பை அமிதாப் பச்சன் கூட வந்து பார்த்தாராம். இந்த சோகக்கதையை படத்தின் இயக்குனர் நந்தகுமாரே ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதில் கொடுமை என்னவென்றால் நந்தகுமார் இயக்கிய முதல் படமும் இது தானாம்.

Next Story