தமிழில் வெளியான முதல் விண்வெளிப்படம்! ‘டிக் டிக் டிக்’இல்லைங்க! அப்பவே பறக்கும் தட்டை பந்தாடிய சின்னவர்

by Rohini |
mgr
X

mgr

சினிமாவை பொறுத்த வரைக்கும் காலத்திற்கு ஏற்ப அதனுடைய வளர்ச்சியும் விஞ்ஞான ரீதியாக வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் வளர வளர அதை ஒட்டி இருக்கின்ற சினிமா துறையும் ஏதோ ஒரு விதத்தில் அதனுடைய வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டுதான் இருக்கின்றன. வெறும் காதல், பாசம், வீரம் என கொண்டிருந்த சினிமா கொஞ்சம் கொஞ்சமாக சைன்ஸ் ஃபிக்சனை நோக்கி நகரத் தொடங்கியது.

mgr1

mgr1

விஞ்ஞான ரீதியாக சேட்டிலைட் உருவாக்கம் ராக்கெட் எப்படி ஏவுகிறார்கள்? விண்வெளியில் எப்படி இருக்கும் என்பதை இப்போது நாம் திரைப்படங்களின் வாயிலாக கண்கூடாகவே பார்த்துக் கொண்டு வருகிறோம். உதாரணமாக ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் என்ற படம் முழுவதும் விண்வெளியில் நடக்கும் காட்சிகளைத் தான் படமாக்கி இருப்பார்கள். அதேபோல மாதவன் நடிப்பில் வெளிவந்த ராக்கெட்டரி விளைவு என்ற படமும் ராக்கெட்டை பற்றியதாகவே அமைந்திருக்கும்.

ஆனால் இந்த மாதிரி படங்கள் இந்த காலகட்டத்தில் வெளிவருவது என்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இதை அன்றே செய்து காட்டி இருக்கிறார் நம்முடைய புரட்சித் தலைவர் எம்ஜிஆர். 1963 ஆம் ஆண்டு வெளியானது கலையரசி என்ற திரைப்படம். இந்தப் படம் தான் தமிழில் வெளியான முதல் விண்வெளி திரைப்படம். அது மட்டும் இல்லாமல் இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ஆகவும் இது கருதப்படுகிறது.

mgr2

mgr2

இந்த படத்தில் எம்ஜிஆர், பானுமதி ,நம்பியார், ராஜஶ்ரீ போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். வழக்கமான கதைக்களத்தோடு தொடங்கிய இந்தப் படம் ஒரு கட்டத்திற்கு மேலாக அனைவரையும் விண்வெளிக்கு கொண்டு சென்று விடும். எம்ஜிஆர் பானுமதியும் படத்தில் கதைப்படி காதலித்துக் கொண்டிருப்பார்கள் .அப்போது விண்வெளியில் இருந்து திடீரென்று ஒரு பறக்கும் தட்டில் நம்பியாரும் அவருடைய கூட்டமும் வேற்று கிரகவாசிகளாக இறங்குவார்கள்.

பூமியில் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கும் நம்பியார் அவருடைய வேற்று கிரகத்தில் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு குறை ஒன்றும் இருக்காது .ஆனால் கலை வளர்ச்சி என்பது அங்கு கிடையாது. அதனால் பூமியில் இருக்கும் நல்ல கலைஞானம் கொண்ட ஒருவரை வேற்று கிரகத்திற்கு கடத்திக் கொண்டு சென்று விட்டால் அங்கேயும் கலை வளர்ச்சி பெறும் என்று கருதுவார்.

mgr3

mgr3

அதன் அடிப்படையில் பானுமதியை நம்பியார் தான் வந்து இறங்கிய பறக்கும் தட்டில் ஏற்றிக்கொண்டு கடத்திச் சென்று விடுவார். இதை அறிந்த எம்ஜிஆர் எப்படி விண்வெளிக்குச் சென்று அவருடைய காதலியான பானுமதியை மீட்டு வருவார் என்பதுதான் மீதி நடக்கும் கதை. இந்தப் படத்தை இயக்கியவர் காசி லிங்கம் இவர் அடிப்படையிலேயே விண்வெளி குறித்த நல்ல நூல்களை படித்த ஒரு அறிவாளி.

ஆனால் இந்த கலையரசி திரைப்படத்தை பார்க்கும் நமக்கு இப்ப வேண்டுமானால் பார்ப்பதற்கு சுமாராக இருக்கலாம். ஆனால் இதை அந்த காலத்திலேயே ஒரே ஒரு தியரியை வைத்துக்கொண்டு அவர்களுக்கு தெரிந்த சாதனத்தை இயந்திரத்தை வைத்துக்கொண்டு உருவாக்குவது என்பது அந்த அளவுக்கு எளிதான விஷயம் இல்லை. இந்தப் படம் சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு விண்வெளி படம் என்கிற அந்த ஒரு விஷயத்தை மட்டுமே தாங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதையும் படிங்க : தேவர்மகன் படத்தை ஒழுங்கா பாத்தியா?.. மாரிசெல்வராஜை வச்சி செய்யும் கமல் ரசிகர்கள்…

Next Story