அப்பவே கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்பட்ட படம்!.. பிரம்மாண்டத்தின் முழு உருவமே இவர்தானாம்!..

Published on: April 12, 2023
sundaram
---Advertisement---

தமிழ் சினிமாவை மூன்று வகையாக பிரிக்கலாம். எம்ஜிஆர்-சிவாஜி காலம், ரஜினி – கமல் காலம், விஜய் – அஜித் காலம் என்று. இந்த மூன்று காலங்களில் சினிமாவின் போக்கே வேற மாதிரி இருந்தது. ரஜினி – கமல் இன்றைய தலைமுறைகளோடு நடித்து வந்தாலும் அவர்களின் பசுமையான 80களில் சினிமாவின் வளர்ச்சி வேறு மாதிரியாக இருந்தது.

ஆனால் இப்போதைய காலகட்டத்தில் ஒரு மெகா ஹீரோவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கோடிக் கணக்கில் பணத்தை போட வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ச்சி அடைந்து வருகிறது.

வெறும் 30 ஆயிரங்களில் படம் எடுத்த காலம் போய் 400 கோடி, 500 கோடி வரை பட்ஜெட்டில் இப்பொழுது ஒரு படத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ் சினிமாவின் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. அதுவும் பெரிய பெரிய பிரம்மாண்ட இயக்குனர்களான சங்கர், ராஜமௌலி போன்றோர் படத்தை கையில் எடுத்து விட்டால் ஒரு பாடலுக்கே கோடிக் கணக்கில் பிரம்மாண்டத்தை காட்டுகின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் அப்பவே வித்திட்டவர் பழம்பெரும் இயக்குனரான டி.ஆர்.சுந்தரம். மாடர்ன் தியேட்டர்ஸ் உரிமையாளரான டி.ஆர்.சுந்தரம் அந்தக் காலத்தில் மிகப்பெரும் பொருட்செலவில் எடுத்தப் படம் ‘மனோன்மணி’. இந்தப் படத்தில் பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி போன்றோர் லீடு ரோலில் நடித்து வெளியான படம்.

இந்தப் படம் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. ஒரு காட்சிக்கே 750 பேரை பயன்படுத்தி படத்தை எடுக்கக் கூடியவராம் டி.ஆர்.சுந்தரம். அதனால் இந்த படத்திற்கு மொத்தம் 1500 பேரை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். மேலும் அவர்களுக்கான சாப்பாடுகள், அதை பரிமாறுவதற்கு உதவியாளர்கள் என 2500 பேர் வரை அந்தப் படத்திற்காக பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கான வசுல் நிலவரம், பட்ஜெட் என சரியாக கணக்கு தெரியாததால் தன் பட விளம்பரத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான படம் ‘மனோன்மணி’ என்றே பெயரிட்டு விளம்பரப்படுத்தினாராம் சுந்தரம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிம்புவிடம் கதை சொன்னதால் கடுப்பான தனுஷ்?… வெற்றிமாறனை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்தார் தெரியுமா?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.