கலாநிதிமாறன் கொடுத்த கிஃப்ட் இருக்கட்டும்!. விஜய் கிஃப்ட் கொடுத்த 5 பிரபலங்கள் யார் தெரியுமா?!..

by சிவா |
vijay
X

Actor vijay: ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை குவித்துவிட்டால் சந்தோஷமான தயாரிப்பாளர் அப்படத்தை வெற்றிப்படமாக கொடுத்த இயக்குனருக்கு அன்பளிப்பா ஒரு தங்க செயினையோ அல்லது ஒரு காரையோ பரிசாக கொடுப்பது என்பது கடந்த 20 வருடங்களாக திரையுலகில் நடந்து வருகிறது.

தயாரிப்பாளர் மட்டுமல்ல.. சில சமயம் அப்படத்தின் ஹீரோ கூட இயக்குனருக்கு பரிசு கொடுப்பார். இதை சினிமாவில் துவக்கி வைத்தவர் நடிகர் அஜித். அஜித்துக்கு பெரிய ஹிட் இல்லாத நேரத்தில் அவருக்கு வாலி படத்தை ஹிட் படமாக கொடுத்த எஸ்.ஜே சூர்யாவுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

இதையும் படிங்க: டேக் ஆப் ஆகும் மிஷ்கின் – விஜய் சேதுபதி படம்!.. வில்லனாக களமிறங்கும் தளபதி68 பட நடிகர்…

அதன்பின் பல தயாரிப்பாளும், நடிகர்களும் அதை பின்பற்றி வருகின்றனர். சிங்கம் படத்தை ஹிட் படமாக கொடுத்த ஹரிக்கு சூர்யா கார் ஒன்றை பரிசாக கொடுத்தார். ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை குவித்ததால் அப்பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் ஆகியோருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக கொடுத்ததோடு சில கோடிகளையும் கொடுத்தார்.

இந்நிலையில், நடிகர் விஜயிடம் அன்பளிப்பு வாங்கிய 5 பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம். காமெடி நடிகர் யோகிபாபு. விஜயுடன் மெர்சல், பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அவர் மீதுள்ள அன்பில் அவருக்கு ஒரு கிரிக்கெட் பேட்டை விஜய் பரிசாக கொடுத்தர். அதேபோல், மெர்சல் படத்தின் விஜயின் மகனாக நடித்த சிறுவனுக்கு பிறந்தநாள் பரிசாக கேமாரா ஒன்றை பரிசாக கொடுத்தார்.

கத்தி படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கு ஒரு பியானோவை பரிசளித்தார். திருப்பாச்சி படத்தை ஹிட் படமாக கொடுத்த இயக்குனர் பேரரசுக்கு ஒரு மாருதி காரை பரிசாக கொடுத்தார். பிகில் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் அப்படத்தில் வேலை செய்த 400 பேருக்கு ஒரு தங்க நாணயத்தை பரிசாக கொடுத்தார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா பாத்தவுடனே ஜூமிங்தான்!.. இளசுகளை ஏக்கப்பட வைக்கும் ஸ்ருதி ஹாசன்!..

Next Story